Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

`உணர்ச்சிவசப்படத் தேவையில்லை, உண்மையை சொல்லுங்கள்’ - NCB; விசாரணையில் கலங்கிய தீபிகா படுகோன்?

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது போதைப் பொருள் தொடர்பான விசாரணையில் கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷிரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (NCB) சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தீபிகா படுகோன் அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில், சுஷாந்துக்குத் தெரியாமல் நடிகையும் சுஷாந்தின் தோழியுமான ரியா அவ்வப்போது போதை மருந்தைத் தண்ணீரிலும் உணவிலும் கலந்துகொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ரியா - சுஷாந்த்

இந்நிலையில், பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உட்பட நடிகைகள் பலர், கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பார்ட்டியில் பங்கேற்ற போது, போதைப் பொருள் குறித்து ‘வாட்ஸ் அப்’பில் உரையாடியது தொடர்பான தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் தீபிகா தனது மேலாளரிடம் போதை வஸ்து குறித்து கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் நடிகை தீபிகா படுகோனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டா ஆகியோருக்கும் கடந்த 23-ம் தேதி NCB அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதில் ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங் ஆஜரான நிலையில் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோர் நேற்று., மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர்.

தீபிகா படுகோன்!

விசாரணையின் போது, சாரா அலி கான் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என மறுத்துள்ளார். இருப்பினும், தனது முதல் படமான கேதார்நாத் படப்பிடிப்பின் போது சுஷாந்த் சிங் ராஜ்புத் உடனான நெருக்கத்தை ஒப்புக்கொண்டார். சுஷாந்தின் பண்ணை வீடு மற்றும் விருந்துகளுக்கு சென்று இருப்பதாக சாரா அலி கான் ஒப்புக்கொண்டார் என NCB வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சாரா அலி கானின் மொபைல் போனை கைப்பற்றிய அதிகாரிகள், அதை தடயவியல் விசாரணைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். 2017 - 18 ஆகிய ஆண்டுகளில் சாரா பயன்படுத்திய மொபைல்போனை கேட்ட அதிகாரிகளிடம் அவை இப்போது எங்கு இருக்கிறது என தெரியவில்லை என்று பதிலளித்தாராம் சாரா.

இதையடுத்து, மும்பை கொலபாவில் உள்ள ஈவ்லின் அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 9.45 மணிக்கு ஆஜராகிய தீபிகாவிடம் NCB அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன் மேலாளர் கரீஷ்மா உடனான வாட்ஸ் அப் உரையாடலில் போதைப்பொருள் குறித்து பேசியது உண்மை என தீபிகா ஒப்புக்கொண்டதாக NCB தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அல்லது ரியா தொடர்பாக NCB அதிகாரிகள் தீபிகாவிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. விசாரணையின் போது தீபிகா படுகோனே மூன்று முறை கண்ணீர் விட்டு அழுததாகவும்., இருப்பினும், NCB அதிகாரிகள் தீபிகாவிடம் 'உணர்ச்சிவசப்பட வேண்டாம்' உண்மையைச் சொல்லுங்கள் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இறுதியில், போதைப் பொருட்களைப் பற்றிய உரையாடல்கள் தன்னுடையதுதான் என்று தீபிகா ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் பிறருக்கு மருந்துகளை வழங்கிய போன்ற குற்ரசாட்டுகளை முழுமையாக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தீபிகா படுகோன்

மேலும் தடயங்களுக்காக தீபிகா படுகோனின் மொபைல் ஃபோனையும், அவரது மேலாளர் கரிஷ்மாவின் அலைபேசியும் NCB அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஜெயா சஹா, ராகுல் ப்ரீத், சிமோன் கம்பாட்டா ஆகியோரின் மொபைல் போன்களையும் NCB கைப்பற்றியுள்ளது.

NCB யின் இந்த சிறப்பு விசாரணைக் குழு திங்கள்கிழமை டெல்லிக்கு சென்ற பின். விசாரணையின் முழு அறிக்கையை NCB யின் நிர்வாக இயக்குநரிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, தன்னைப் பற்றிய செய்திகளுக்கு தடை கோரி, ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், டிவி மற்றும் செய்தித் தாள்களில் தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/deepika-padukone-cried-three-times-during-questioning-by-the-ncb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக