யோகம் என்பது உயிர் தத்துவத்தை வளர்க்கும் ஓர் உன்னதக் கலை. வரும் 11.10.2020 அன்று காலை 7 மணிக்கு நாம் இணையத்தின் வழியே நாம் காணவிருக்கும் தேக சுத்தி யோக பயிற்சி முறைகள் முக்கியமானவை, ஆயுளை நீட்டிக்கக் கூடியவை. உடலின் சூத்திரங்களை நன்கு அறிந்து கொண்ட நம் முன்னோர்கள் - குருமார்கள் உடலை தசை, நரம்பு, எலும்பு, உள்ளுறுப்புகள், சுரப்பிகள் ஆதாரங்கள் என முறையாகப் பிரித்து அவை ஆற்றலோடும் ஆரோக்கியத்தோடும் இயங்கப் பல பயிற்சி முறைகளை உருவாக்கித் தந்துள்ளனர். அதில் இந்த தேக சுத்தி முறைகள் அவசியமானவை. ஒவ்வொரு உறுப்பிலும் சேகரமாகும் அசுத்தங்களைக் களைந்து உடல் நன்கு செயல்பட இந்தப் பயிற்சிகள் பயன்படும். அதில் முதல் பயிற்சி முறை...
ஒருமுகப்படுத்தும் சக்கரப் பயிற்சி
அதிகாலையில் நம்முள் எழும் தெய்விக ஆற்றலின் அதிர்வுகள் இனிமையானவை. அந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் எந்தப் பயிற்சியும் அதிக பயன் அளிக்கக் கூடியது. இந்த நேரத்தில் மனதை ஒருமுகப்படுத்தி அதன் வழியே நம் எண்ணங்களைத் தூண்டி மேற்கொள்ளும் சக்கர தியானத்தால் நம்முடைய அன்றாட திட்டங்களைச் சாத்தியமாக்கும் திடத்தைப் பெறலாம். ஆற்றல்கள் முழுவதும் ஒரே புள்ளியில் இணைவதால் உடல் லேசாகி உயிர் ஆற்றலை அதிகம் பெற்றுக் கொள்ள இந்தப் பயிற்சி அவசியமானது எனலாம்.
இந்தப் பயிற்சியின் பலன்கள்
எண்ணிய எண்ணங்களை எட்டக்கூடிய மன ஒருமையைப் பெறலாம். உடலின் கழிவுகளை எளிமையாகப் பிரிக்க உதவும். கழிவுகள் தேங்காத தேகம் விரைவில் நோயற்ற தேகமாக மாறும் ஐயமில்லைதானே!
கவனிக்கவும்:
-
இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.
-
உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.
-
உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.
-
உடைகள் தளர்வாக இருப்பது நலம்.
நாள்: 11.10.2020
நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை
இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/news/sakthi-vikatans-inner-cleansing-yoga-practice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக