சென்னை, முகப்பேர் மேற்கு, 6-வது பிளாக்கைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (45). டூ வீலர் மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் ஃபைனான்ஸ் தொழிலும் செய்துவந்தார். இவரின் மனைவி சித்ரா செல்வி (38). இவர் ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இந்தத் தம்பதியினருக்கு ஜஸ்வந்த் ரத்தினம் (19) என்ற மகனும், நேத்ரா (12) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவனும் மனைவியும் கடந்த 2 ஆண்டுகளாக மனம்விட்டு பேசாமல் இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சித்ராசெல்வியும், நேத்ராவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சேலம் சென்றிருந்தனர்.
இதனால் சிவப்பிரகாஷ் தனது மகன் ரத்தினத்துடன் வீட்டில் இருந்தார். மனைவி, பிள்ளைகள் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்த சிவபிரகாஷ், தனது படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவபிரகாஷின் அறைக்கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரின் மகன், கதவைத் தட்டியுள்ளார். ஆனால் பதில் வரவில்லை. இதையடுத்து ரத்தினம், தன்னுடைய பெரியப்பா குமாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவப்பிரகாஷ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்களும் அவரின் மகனும், சிவப்பிரகாஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சிவபிரகாஷ், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Also Read: நெல்லை: ஒரே அறையில் கணவன், மனைவி தற்கொலை! - உருக்கமான தகவல்கள்
இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிவப்பிரகாஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவப்பிரகாஷின் சகோதரர் குமார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், `என் தம்பி சிவப்பிரகாஷுக்கும் அவரின் மனைவிக்கும் 2 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்தது.
Also Read: நெல்லை: ஒரே அறையில் கணவன், மனைவி தற்கொலை! - உருக்கமான தகவல்கள்
அதனால் மனமுடைந்த என் தம்பி சிவப்பிரகாஷ், 27-ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்பிரபு வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார். விசாரணையில் மனைவி மற்றும் குழந்தைகள் மனம்விட்டு பேசாத விரக்தியில் சிவப்பிரகாஷ், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
source https://www.vikatan.com/news/crime/chennai-financier-commits-suicide-over-family-problem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக