கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க செயலாளரான கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவராகவும் இருக்கிறார். மேலும் அவர், பாலாஜி ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்திவருவதால் அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என ஆரல்வாய்மொழி பேரூராட்சி ம.தி.மு.க செயலாளர் முருகேசன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 03.09.2020 அன்று அளித்த தீர்ப்பில் கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதன்பிறகும் அவர் தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணி செய்து வருவதாகவும். அரசு காரை பயன்படுத்த்தி வருவதாகவும் வழக்குத்தொடர்ந்த முருகேசன் புகார் தெரிவித்தார். அத்துடன் நிற்காமல் கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி நாகர்கோவிலிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் முருகேசன் கடந்த 15-ம் தேதி புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரணை நடத்தியது. பின்னர், கிருஷ்ணகுமாரை தகுதி நீக்கம் செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். `நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டுறவு கடன் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல் பட்டிருந்தால் தகுதி நீக்கம் செய்யலாம்.
Also Read: குமரி: மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் தகுதி நீக்கம்! - உயர்நீதிமன்றம் அதிரடி
ஆனால் மனுதாரரின் மனைவிதான் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவி பெயரில்தான் உரிமம் உள்ளது. மேலும் அந்த நிதி நிறுவனம் மனுதாரர் தலைவராக உள்ள தொடக்க கூட்டுறவு வங்கியின் எல்லைக்குள் செயல்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது”என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் கிருஷ்ணகுமார் மற்றும் அ.தி.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே வழக்குத் தொடர்ந்த முருகேசனிடம் பேசியபோது, "உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூறுகிறேன்" என்றார்.
Also Read: குமரி: `இப்போதும் அரசு காரை பயன்படுத்துகிறார்' - அதிமுக கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தகுதிநீக்க சர்ச்சை
source https://www.vikatan.com/news/tamilnadu/kumari-admk-cadre-can-continue-as-cooperative-head-says-hc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக