Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

குறட்டை விட்டால் மாரடைப்பு வருமா? பதிலளிக்கும் இதய மருத்துவர் ஆர்.சிவக்குமார் #WorldHeartDay

உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கிய 'ஹலோ.. நான் உங்கள் இதயம் பேசுகிறேன்!' என்ற இணையதள ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

olive oil

ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூத்த இதய மருத்துவர் ஆர்.சிவக்குமார் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் தீர்வளிக்கப்பட்டது.

இதயநோயாளிகளுக்கு ஆலிவ் எண்ணெய்தான் சிறந்ததா என்ற வாசகரின் கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர், "எண்ணெய் விஷயத்தில் தற்போது கான்செப்ட் மாறியிருக்கிறது. எண்ணெய்களை சாச்சுரேட்டட் (saturated) பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated), மோனா அன்சாச்சுரேட்டட் (Mono unsaturated) என்று பிரிக்கின்றனர். இதயநோயாளிகள் தேங்காய் எண்ணெய், நெய் ஆகிய சாச்சுரேட்டட் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

Interventional Cardiologist Dr.R.Sivakumar

மோனோ அன்சாச்சுரேட்ட் வகையைச் சேர்ந்த நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இரண்டும் சிறந்தவை. ஆனால் எல்லோராலும் ஆலிவ் எண்ணெயை வாங்கிப் பயன்படுத்த இயலாது. எண்ணெய் விஷயத்தில் அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரே எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தாமல் இரண்டு, மூன்று எண்ணெய்களை சரிவிகிதமாகப் பிரித்துப் பயன்படுத்தலாம். ஆரோக்கியமானவர்களுக்கும் இது பொருந்தும்" என்றார்.

Also Read: நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

குறட்டைவிடுபவர்களுக்கு இதயநோய் ஏற்படுமா என்ற கேள்விக்கு, "குறட்டைக்கும் இதய நோய்க்கும் நேரடித் தொடர்பு கிடையாது. குறட்டை விடும் பிரச்னை, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்படலாம். மூச்சுப்பாதையில் தசைகள் இடையூறு விளைவிப்பதால் குறட்டை ஏற்படும். இந்தப் பிரச்னையை ஸ்லீப் அப்னீயா (Sleep Apnea) என்பார்கள்.

ஆன்லைனில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் காண்பதற்கு கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்.

உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் 'ஹலோ.. நான் உங்கள் இதயம் பேசுகிறேன்!' - ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி #AvalVikatan | #Heartday | #WebinarWithVikatan

Posted by Aval Vikatan on Saturday, September 26, 2020

குறட்டை விடும் பிரச்னையின் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் இருப்பவர்கள் என்றால் சர்க்கரைநோயும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளால் இதயம் பலவீனமடைதல் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம். நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் இதயநோய்க்கு அழைத்துச் செல்லும் வழியாக குறட்டை இருக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/cardiologist-drrsivakumar-explains-about-link-between-snoring-and-heart-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக