Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

``அந்தக் கேள்வியை த்ரிஷா, நயன்தாராகிட்ட கேட்பாங்களா?'' - சீறும் சோனியா அகர்வால்

சினிமா உலகம் இன்னும் முழுமையாக இயங்கத் தொடங்காத இந்த நாட்களில், ரூட்டை மாற்றி புதிய பிசினஸ் ஒன்றையே தொடங்கியிருக்கிறார். திருமணங்களை அழகாக்கும் வெடிங் பிளானிங்தான் அது. தன் முதல் இன்னிங்க்ஸில் `கிளாசிக் ஹிட்ஸ்' கொடுத்த சோனியாவிடம் சினிமாவில் செகண்ட் இன்னிங்க்ஸ் அப்டேட்ஸ் என்ன எனக் கேட்டோம். அதற்கான பதிலைச் சொன்னவர், அதற்கு முன்பு திருமணமான கதாநாயகிகள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்த தன் கோபத்தை முதலில் பகிர்ந்துகொண்டார்.

``நான், த்ரிஷா, நயன்தாரா மூணு பேரும் ஒரே வயசுக்காரங்க. 82-83ல பிறந்தவங்க. ஆனா என்கிட்ட `நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களா'னு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இதே கேள்வியை நீங்க த்ரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு கேட்டிருக்கேன். ஒருவேளை நான் வயசானவ மாதிரி மாறியிருந்தாலோ, உடம்பை ஃபிட்டா வெச்சுக்கலைன்னாலோகூட ஓகே. நான் இளமையா இருக்கேன். ஃபிட்னெஸ்ஸை மெயின்டெயின் பண்றேன்.

அப்படியிருக்கும்போது ஏன் அம்மா கேரக்டருக்கு என்னை யோசிக்கிறீங்க? நானும் ராதிகா மேடம், குஷ்பூ மேடம் வயசை எட்டினதும் அம்மா கேரக்டர் பண்றேனே. இப்ப எனக்கு அதுக்கான வயசில்லை.''

இத்துடன் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிகளைப் பார்க்கும் விதம் பற்றியும் பேசியிருக்கிறார் சோனியா. இதுதவிர, இன்னும் பல்வேறு கேள்விகளுக்கும் தன் விரிவான பதிலைத் தந்தார்.

சோனியா அகர்வால்

> முதல் கல்யாணத்துல என்னதான் பிரச்னை?

> மறுபடி கல்யாணம் எப்போ?

> செல்வராகவனை மீட் பண்ணீங்களா? என்ன சொன்னார்?

இன்னும் பல கேள்விகளுடன், சோனியா அகர்வாலின் மனம் திறந்த பேட்டியை நாளை வெளிவரவிருக்கும் அவள் விகடன் இதழில் படிக்கலாம்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/sonia-agarwal-speaks-about-acting-in-mother-roles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக