பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுகிழமையன்று ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார்.
அதன்படி, இன்று 69 -வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணி அளவில் உரையாற்றினார் நரேந்திர மோடி. அப்போது, "கொரோனா நெருக்கடி காலம், குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பை அதிகப்படுத்தி, அவர்களை நெருக்கமாக உணர வைத்துள்ளது" என்றார்.
``நம் நாட்டில் பலவகையான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது, இதை வில்லுப்பாட்டு என அழைக்கிறோம்.
கதை, இசை என ஒன்றோடு ஒன்று இணைந்து பரவசமூட்டும் வில்லுப்பாட்டு நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறுவதை செய்து வருகிறார். இந்த பாராம்பரியம் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்” என்றார்.
Also Read: `மன் கி பாத்’ உரையில் பாகீரதி அம்மா! -பிரதமரின் பாராட்டால் நெகிழும் 105 வயது மூதாட்டி
மேலும், ``கதைகளின் வரலாறு மனித நாகரிகத்தைப் போலவே பழமையானது. 'ஒரு ஆன்மா இருக்கும் இடத்தில், ஒரு கதை இருக்கிறது'. இந்தியாவில், கதை சொல்லும் ஒரு பாரம்பரிய மரபு உள்ளது. பஞ்ச தந்திரக் கதைகள் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்துகிறது என்பதால் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாட இருக்கும் நிலையில், ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலிருந்து உத்வேகம் தரும் அனைத்து கதைகளையும் மக்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக 1857 மற்றும் 1947 க்கு இடையில் நடந்த நிகழ்வுகளை, இன்றைய தலைமுறைகளுக்கு கதை சொல்லிகள், கதைகளின் வடிவத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, வேளாண் மசோதாக்கள் குறித்து பேசிய மோடி, நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்யும் சுதந்திரத்தை விவசாயிகள் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டினார். தன்னிறைவு இந்தியாவின் அடித்தளமாக விளங்குவதே விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறைதான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/pm-modi-mention-villupattu-in-mann-ki-baat
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக