Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

எளிய முறையில் கல்விக் கடன்: வித்யாலக்‌ஷ்மி இணையதளத்தைப் பயன்படுத்துவது எப்படி?

கல்விக் கடன் குறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடியிடம் பேசினோம். ``கல்விக் கடன் பெறும் நடைமுறைகள் இப்போது எளிதாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் கல்விக் கடன் பெற `நாம் எந்த வங்கியை அணுக வேண்டும், அந்த வங்கி கடன் தருமா' என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால், இப்போது அந்தச் சிக்கலெல்லாம் கிடையாது. கல்விக் கடனுக்காக வித்யா லக்‌ஷ்மி என்ற பிரத்யேக வெப்சைட் உள்ளது. அந்த வெப்சைட்டில் அனைத்து வங்கிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

கல்விக் கடன் வேண்டும் என்ற மாணவர்கள் வித்யாலக்‌ஷ்மி வெப்சைட்டில் பதிவு செய்தால் போதும். அவர்களுடைய ஊர், அவர்கள் விரும்பும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகளில் சிறப்புச் சலுகைகள் உள்ளன என்பதையெல்லாம் கணக்கில்கொண்டு அவர்களுக்கான வங்கியைப் பரிந்துரை செய்வார்கள். கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் திரும்பச் செலுத்துவதற்கான விதிமுறைகள் போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதில் பதிவு செய்தவுடன் பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு அந்த வங்கிக்குச் சென்று மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரிக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதுமானது.

கல்விக் கடன்

அந்த வெப்சைட் பரிந்துரைக்கும் வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது. புதிதாக கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். வெப்சைட்டில் பதிவு செய்யாமல் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும் கல்விக் கடன் பெற முடியும்" என்றார்.

இந்தியா முழுவதும் மாணவர்கள் எளிதாக ஆன்லைன் வாயிலாக கல்விக் கடன் பெறும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள இணையதளம்தான் வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in/Students/index). இந்த இணைய தள சேவையை என்.எஸ்.டி.எல் (NSDL - National Security Depository Limited) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கல்விக் கடன் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தனக்கென்று நிரந்தரக் கணக்கை உருவாக்க வேண்டும்.

இதில் மொபைல் எண்,

இ-மெயில் முகவரி,

மாணவர் பெயர்,

தந்தை பெயர்

ஆகியவற்றைக் குறிப்பிட்டால் பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி, லாக்-இன் செய்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சப்மிட் செய்ய வேண்டும். இதில், தங்கள் இல்லத்துக்கு அருகில் உள்ள தேசிய வங்கி பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

பின்பு எந்தத் துறையைச் சார்ந்த படிப்பு, எத்தனை வருடப் படிப்பு , ஆண்டுக்கு எவ்வளவு ரூபாய் கல்விக்கட்டணம் தேவை உள்ளிட்ட தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குக் குறுந்தகவல் வரும். அதன் பிறகு, கல்விக் கடன் விண்ணப்பித்ததுக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

இதைத் தொடர்ந்து விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். பிறகு, வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர் மற்றும் அவரின் பெற்றோரை வங்கிக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுப்பார். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்தக் கிளை வங்கியின் வாயிலாக வழங்கப்படும் என்பது முடிவாகும். மேலும், கல்விக் கடனை வங்கிகள் வழங்கவில்லை எனில், அது குறித்து அந்த இணையத்திலேயே புகார் அளிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட சுமார் 36 வங்கிகள் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன.

> எந்தப் படிப்புக்கெல்லாம் கல்விக் கடன்? / எவையெவை அடங்கும்? / தேவைப்படும் ஆவணங்கள் / வங்கியை எப்படித் தேர்வு செய்வது? / வட்டி விகிதமும் மானியமும் / யாருக்கு மானியம் கிடைக்கும்? / வட்டி எவ்வளவு? / எந்த அடமானமும் இல்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் / கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த அவகாசம் கல்விக் கடன் பெற்றவர்களின் அனுபவம்...

- இவ்வாறாக கல்விக் கடன் தொடர்பான A to Z வழிகாட்டுதல்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க கிளிக் செய்க - https://bit.ly/347TPB9

பட்டப் படிப்புக்கு பணம் பிரச்னையா..? - கல்விக் கடன் பெறும் சுலப வழிகள்! https://bit.ly/347TPB9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/business/banking/how-to-get-education-loan-easily-by-using-govts-vidya-lakshmi-portal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக