கடன் கேட்பவர், அவர் கேட்கும் தொகையைப் பெறத் தகுதியானவர்தானா, கடனை வட்டியுடன் சரியான காலத்தில் திருப்பித் தரும் பழக்கம் உள்ளவரா என்பதையெல்லாம் துல்லியமாகச் சொல்வதுதான் கிரெடிட் ஸ்கோர்.
2007-ல்தான் இந்த கிரெடிட் ஸ்கோர் என்ற கருத்தாக்கத்தை (concept) டிரான்ஸ் யூனியன் சிபில், எக்ஸ்பீரியன் போன்ற கிரெடிட் பீரோக்கள் அறிமுகம் செய்தன.
ஒருவருக்கு கடன் தருவதற்குமுன் அவருடைய கிரெடிட் ரிப்போர்ட்டும் கிரெடிட் ஸ்கோரும் கட்டாயம் பார்க்கப்படும். ஆகவே கடன் தரும் வங்கிகளுக்கும் கிரெடிட் கார்டு கம்பெனிகளுக்கும், பிற கடன் நிறுவனங்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரது கடன் வரலாற்றைப் பொறுத்து, 300 முதல் 900 வரையிலான புள்ளிகளாக இருக்கும். 300 முதல் 550 வரையிலான புள்ளிகள், கடன் கேட்பவர் தரத்தை `சுமார்' என்றும், 550 முதல் 700 வரையிலான புள்ளிகள் `நன்று' என்றும், 700 முதல் 900 வரையிலான புள்ளிகள் `மிக நன்று' என்றும் அறிவிக்கின்றன.
இப்போதெல்லாம் வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள் தரக்கூடிய கடன் தொகை, வட்டி விகிதம் எல்லாம் ஒருவரின் கிரெடிட் ஸ்கோரைச் சார்ந்தே அமைகின்றன.
உதாரணமாக, எல்.ஐ.சி ஹவுஸிங் நிறுவனம் 800 புள்ளிகளுக்கு அதிகமாக கிரெடிட் ஸ்கோர் இருப்போருக்கு கடன் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
கிரெடிட் ஸ்கோர் நல்ல விதத்தில் இருப்பது அவசியம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதால், வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிக் கட்டும் ஒழுக்கம் அதிகரித்துள்ளது.
- நம்முடைய கிரெடிட் ஸ்கோர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து அக்கறைப்பட வேண்டிய காலம் இது. காரணம், கோவிட்-19 நம் வருமானத்தைக் கணிசமாகக் குறைத்திருப்பதுடன், நமது கிரெடிட் ஸ்கோரையும் வெகுவாகக் குறைத்துவிட்டது.
கிரெடிட் ஸ்கோர் குறையாமல் இருக்கவும், கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் 7 வழிகளையும் பகிர்கிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன். அவற்றை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க > கடன் வாங்க கைகொடுக்கும் கிரெடிட் ஸ்கோர்! - தக்கவைக்கும் வழிமுறைகள்! https://bit.ly/2G648xp
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/business/banking/guide-to-maintain-a-good-credit-score
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக