Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

`விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்... பிரேமலதா உடல்நிலை சீராக இருக்கிறது!' - மருத்துவமனை #NowAtVikatan

விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ்

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பொருளாளர் பிரேமலதா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சென்னை தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் - பிரேமலதா

இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்துக்கு செப்டம்பர் 28-ல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, செப்டம்பர் 29-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரேமலதாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை அறிக்கை

அதேபோல், பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின்னர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லையெனவும் கூறப்பட்டிருக்கிறது. தொடர் மருத்துவ சேவைகளால் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Also Read: `விஜயகாந்த் நாளை மாலை வீடு திரும்புகிறார்!’ - சுதீஷ் தகவலால் தொண்டர்கள் உற்சாகம்

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் வேறு என்ன மாதிரியான தளர்வுகள் வழங்கலாம் ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நாளையுடன் 8-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில், இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்பாக அவர், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

Also Read: ஊரடங்கு காலத்திலும் ஏற்றுமதியில் சாதித்த விவசாயத்துறை... அரிசியும் சர்க்கரையும் முன்னிலை!

தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகள் திறப்பு, தியேட்டர்களைத் திறக்க அனுமதியளிப்பது மற்றும் புறநகர் ரயில்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்டவைகள் குறித்தும், கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சூர்யா

சென்னையிலுள்ள நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அரசியல் ரூட் எடுக்கும் `நீட்' சூர்யா... பரபரக்கும் இயக்குநர் பாண்டிராஜ் படம்! #VikatanExclusive

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 61,45,292-ஆக அதிகரித்திருக்கிறது.

Covid-19 care

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 776 மரணங்கள் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 96,318 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 51,01,398பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Also Read: ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!



source https://www.vikatan.com/news/general-news/29-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக