ஐரோப்பாவின் பண்டைய வரலாற்றைத் தாங்கி நிற்பது போலவே பன்னெடுங்காலமாக பல்கலைக்கழக வரலாற்றையும் பிரான்சு நாடு கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் இத்தாலியின் போலாங்க்னோ ஸ்பெயின் சாலமன்கோ பல்கலைக்கழகம் போல பிரான்சு நாட்டிலும் 12ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பெரும்புகழ் கொண்ட பாரிஸ் பல்கலைக்கழகம். 1793இல் பிரன்சுப் புரட்சியின் போது மூடப்பட்டு, 1896இல் மீண்டும் திறக்கப்பட்ட சோர்பான்னே பல்கலைக்கழகம், (Sorbonne Université), தெளலோசு கூட்டிணைப் பல்கலைக்கழகம் (Université fédérale de Toulouse Midi-Pyrénées), மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகம் (Université de Montpellier), மற்றும் ஏக்சு-மார்செய்லே பல்கலைக்கழகம் (Aix-Marseille Université), ஆகியவை 13-15ஆம் நூற்றாண்டிலிருந்து இயங்கி வருகிறது.
தற்பொழுது பிரான்சு நாட்டில், கிட்டத்தட்ட அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சிறப்புப் பயிற்சி/சிறப்புப் பயிற்சிக் கல்லூரிகள், கலைப்பாட பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் என 3500 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. அரசுப் பல்கலைக்கழகங்கள் மட்டும் கிட்டத்தட்ட 70 உள்ளன. சில கல்விச்சட்டத் திருத்தத்தின் பின்னர் பல ஊர்களில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களுக்கு பெயர் மாற்றப்பட்டதால், ஒரே பெயர் கொண்ட பல்கலைக்கழகங்கள் பல ஊர்களில் இருக்கும். அண்ணா பல்கலைக்கழக சென்னை, கோவை வளாகங்கள் இருப்பது போல.
இவைகளோடு, தோராயமாக 200 எண்ணிக்கையிலான Grandes écoles என்ற தனிச்சிறப்பு கல்வி நிறுவனங்களும் உண்டு, இதில் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களும் அடங்கிறது.
இதனை சான்றோர் பள்ளி, சான்றோர் கல்வி நிறுவனங்கள், சான்றோர் கல்லூரி எனவும் வகைப்படுத்தலாம். நெப்போலியன் இத்தாலியை 10 வருடங்கள் ஆண்டபோது அங்கும், ஃபிரன்சு வல்லாதிக்கத்தின் பகுதியாக இருந்த சுவிசர்லாந்தின் சில பல்கலைக்கழகங்களும் அந்நடைமுறையைப் பின்பற்றின. பொறியியல், தொழிற்நுட்பவியல், மேலாண்மை உள்ளிட்டத் துறைகளுக்கான உயர்கல்வியினை இவ்வகை கல்வி நிறுவனங்களில் பயிலலாம். இதற்கென, பள்ளிக்கல்வி நிறைவுற்றப் பின், 2 ஆண்டுகள் தனிப்பயிற்சி பாடத்திட்டமும் உண்டு. இவ்வகையான பயிற்சிகளும் தனித்தேர்வுகளும் காலப்போக்கில் உயர்கல்வித் தரத்தினைக் குறைத்துவிட்டது எனவும், மாணவ, மாணவியர்கள் சோர்வடைந்து ஓராண்டுப் பயிற்சியிலேயே விலகிச் சென்று பல்கலைக்கழகப் பாடப்பிரிவிற்கு மாறிவிடுகின்றனர் என்ற விமர்சனமும் அதற்கேற்ற மாற்று வழிமுறைகள் குறித்த யோசனைகளும் நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது.
பிரான்சு நாட்டு உயர்கல்விச் சூழலைப் பொறுத்தவரை பல்வேறு துறைகளுக்கும் (நுண்கலை, கட்டடிவியல், கட்டிட வடிவமைப்பு, சிற்பவியல், நிலத்தோற்ற வடிவமைப்பு) தனித்தனியே சிறப்புவகைப் பல்கலைக்கழகங்கள் உண்டு.
1400 பாடப்பிரிவு ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றது. https://www.inde.campusfrance.org/system/files/medias/documents/2019-04/Booklet%20%282019%29%20Taught%20in%20English.pdf
இப்படியான நீண்ட வரலாறு, பல்வகை வாய்ப்புகள் உடையதால், பன்னாட்டு மாணவ, மாணவியர்களின் ஈர்ப்பு மையமாகவும் பிரான்சு பல்கலைக்கழகங்கள் திகழ்கிறது. 2018இன் புள்ளிவிவரங்களின் படி ஒட்டுமொத்தமாக 27 ஐரோப்பிய நாடுகளில் (EU-27) 13 லட்சம் அயல்நாட்டவர்கள் உயர்கல்வியில் பயில்கின்றனர். அவர்களில், ஜெர்மனிக்கும் 17% பிரான்சிற்கும் 8% இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளைத் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
https://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php?title=Learning_mobility_statistics
2017-2018இல் 324000, 2018-2019 இல் 34300, 2019-2020இல் 358000, 2020-2021இல் 370000 அயல்நாட்டு மாணவ, மாணவியர்கள் கல்வி பயில பிரான்சு நாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2019இல் 10000 இந்திய மாணவ, மாணவியர் பிரான்சு நாட்டிற்கு கல்வி பயிலச்சென்றுள்ளனர். 2020 மற்றும் 2021இல் கோவிட் பெருந்தொற்றுக் காலத்திலும் பிரான்சு நாட்டிற்கு கல்விப் பயில வந்த இந்திய மாணவ, மாணவியர்களின் ஈர்ப்பு அதிகமாக இருந்ததால், பிரான்சு இந்தியர்களுக்கான சிறப்பு உதவி மையங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
https://in.ambafrance.org/Study-in-France-12461
2025ற்குள், 20000 இந்திய மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பினை வழங்க இருப்பதாக இந்திய-பிரான்சு இருநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது (May 2022 The economic times)
உயர்கல்வி கட்டமைப்பு:
இளநிலைக் கல்வியைப் பொறுத்தவரை மூவகையானக் கல்வி உள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கும் 60 ECTS, நிறைவுச் செய்யும்பொழுது தனித்தனிச் சான்றிதழ்கள் கிடைக்கும். முதலாம் ஆண்டு நிறைவில், நம்மூர் பட்டயச் சான்றிதழ் (Diploma), இரண்டாம் ஆண்டு நிறைவில் தனிச்சிறப்புக் கல்லூரிகளின் நுழைவிற்கான தரச்சான்றிதழ், தொழிற்நுட்பப் பட்டயம், கலை/நுண்கலை பட்டயச் சான்றிதழ், மூன்றாம் ஆண்டு நிறைவில் பட்டப் படிப்பு நிறைவுச் சான்றிதழ்.
முதுநிலைக் கல்வியிலும் பல்வேறு வகையான சான்றிதழுக்கான வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக 300 ECTS நிறைவுச் செய்ய வேண்டியும் வரலாம். அதாவது, 5 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்விக்கான வாய்ப்புகளும் அதிகம். வணிக மேலாண்மை (Business Management) கல்வியியல், மொத்தமாக 6 ஆண்டுகள் கற்றலும் உண்டு.
பிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்கள்
https://www.campusfrance.org/en/institutes-higher-education-France
https://www.campusfrance.org/en/certification-labels-institutes-France
https://fulbright-france.org/en/study-france/understanding-french-education-system
பிரான்சு பல்கலைக்கழகத் தரவரிசை
https://www.timeshighereducation.com/student/best-universities/best-universities-france
https://www.usnews.com/education/best-global-universities/france
பிரான்சு பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்
பல்கலைக்கழகம், பட்டப்படிப்பைப் பொறுத்துத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கீழேக் காணவும். சில பலக்லைக்கழகங்களில் GRE, GMAT வகையானத் தேர்வுச் சான்றிதழும் அவசியமாகலாம். Grandes Ecoles வகையான தனிச்சிறப்புக் கல்வி நிறுவனங்கள் பன்னாட்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்வித் தகுதியினை உறுதிச்செய்ய தனியே நுழைவுத் தேர்வும் நடத்துகிறார்கள். பெரும்பாலுமான பல்கலைக்கழகங்கள் நேர்முகத் தேர்வினையும் நடத்துகிறார்கள்.
https://www.inde.campusfrance.org/application-and-admission-procedure
பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடப்பிரிவினைப் பற்றி அறிய கீழே உள்ள இணைய முகவரியினைக் காணலாம்.
https://www.inde.campusfrance.org/finding-the-right-program-1
https://taughtie.campusfrance.org/tiesearch/#/catalog
பிரான்சு நாட்டினைப் பொறுத்தவை இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு இளநிலைக் கல்வியில் நுழையக் கூட விண்ணப்பிக்கலாம்.
https://www.campusfrance.org/en/espaces
மேலதிகத் தகவல்களைக் காண, https://www.campusfrance.org/en/application-etudes-en-france-procedure
கல்விக்கட்டணம்
பிரான்சு நாட்டினைப் பொறுத்தவரை, ஆண்டொன்றிற்கு 10 லட்சம் வரையில் கல்விக்கட்டணம் இருக்கலாம். ஆனால், பிரான்சு நாட்டு அரசு நிதி உதவி, கல்வி ஊக்கத்தொகை, பிரான்சு தூதரகத்தின் சிறப்புத் திட்டங்களின் உதவியால் கல்விக்கட்டணம் ஏனைய நாடுகளை ஒப்பிடும்பொழுது சராசரியாக குறைந்தேக் காணப்படும். உதாரணமாக, இளநிலைக் கல்விக்கு ஆண்டொன்றிற்கு 2.5 லட்சம் இந்திய ரூபாய், முதுநிலைக் கல்விக்கு ஆண்டொன்றிற்கு 3.5 லட்சம் என்பது சராசரி செலவாக இறுதியில் தென்படும். தனியார், மேலாண்மைப் பள்ளிகளில் 3.5 லட்சங்கள் முதல் 15 லட்சங்கள் வரை ஆண்டுக் கல்விக்கட்டணமாக இருக்கிறது.
பிரன்ஞ்ச் மற்றும் ஆங்கிலப்புலமைத் தேர்வு
பிரன்ஞ்ச் மொழிக் கல்வியில் பயிலும் பொழுது, பெரும்பாலுமான பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கட்டணம் மிகக் குறைவாகச் செலுத்தினால் போதுமானது. பிரான்சு நாடு/ஐரோப்பிய நாட்டு மாணவ, மாணவியர்களுக்கு இணையாகவோ அல்லது சற்றுக்கூடுதலாகவோ கல்விக்கட்டணம் இருக்கும். லட்சங்களில் இருந்து ஆயிரங்களுக்கு நமது செலவும் மாறிவிடும். அதற்குரிய புலமைச் சான்றிதழ் ( TCF (Test de connaissance du français - Test of knowledge of French), Le TEF (Test d’évaluation de français - French assessment test)) அல்லது பட்டப்படிப்புச் சான்றிதழ் (The DELF (Diplôme d’études en langue française - Diploma of French-language studies), DALF (Diplôme approfondi de langue française - Advanced diploma in French language)) சமர்பிக்க வேண்டும். ஆங்கில வழிப் பாடப்பிரிவிற்கு IELTS அல்லது TOEFL ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து அறிய,
https://www.campusfrance.org/fr/candidature-procedure-etudes-en-france
விண்ணப்பங்கள் பதிவுச் செய்ய
https://pastel.diplomatie.gouv.fr/etudesenfrance/dyn/public/authentification/login.html
தனிப்பயிற்சிச் சான்றிதழுக்கு https://www.parcoursup.fr/ என்ற முகவரியில் பதிவுச் செய்து, அடுத்தடுத்தப் பயிற்சிகளைக் கடந்து சான்றிதழ் பெறவும், அதற்கடுத்ததாக, https://www.campusfrance.org/en/espaces என்ற இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள நாடுவாரியான விவரங்களை அறிந்து, கல்விப் பயில்வதற்கான அனுமதி விண்ணப்பங்களை இட வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக 16000 இந்திய ரூபாய் வரை ஆகலாம்.
விண்ணப்பிக்கும் நாட்கள்
இவைகளுக்கான பதிவு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்குகிறது. பட்டப்படிப்பு மற்றும் தொழிற்நுட்பக் கல்விக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் முதல் தொடங்குகிறது.
ஏனைய தகவல்களையும் பெற https://www.france-education-international.fr/en/tcf-dap என்ற தளத்தினைக் காணலாம்.
வாழ்க்கைச் செலவு
பிரான்சு நாட்டில் 964 மணி நேர பகுதி நேரத்திற்கு முறைப்படியான அனுமதி உண்டு. முழுமையாக வாழ்க்கைச் செலவிற்கு போதாது எனினும், சராசரி பொருளாதாரத் தேவைகளுக்கு இவை உதவும்.
https://france-visas.gouv.fr/en/web/france-visas/student
ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை, ஏனைய நிதியுதவி இல்லாத மாணவ, மாணவிகள் தங்கள் 3 மாத வங்கிக்கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
https://www.inde.campusfrance.org/faq/what-all-financial-documents-will-be-required
மாணவ நுழைவிசைவு (Student Visa)
விண்ணப்பங்கள் பதிவுச் செய்ய: https://www.inde.campusfrance.org/
தகவல்களை பெற: https://www.inde.campusfrance.org/node/46
மேலதிகத் தகவல்களை https://france-visas.gouv.fr/web/france-visas/ என்ற இணைய முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.
பிரான்சு நாட்டு கல்வி ஊக்கத்தொகை
ஐரோப்பக் குடியுரிமை இல்லாத அயல்நாட்டு மாணவ, மாணவிகளுக்கு 20% முதல் 100% வரையிலான கல்விக்கட்டணத்திற்கான உதவித்தொகையினை அவரவர் நாட்டு ஃபிரான்சு தூதரகம் வழங்குகிறது. 2019இல், தங்கள் நாட்டிற்கு கல்விப் பயில வந்த 10% மாணவ, மாணவிகளுக்கு பிரான்சு தூதரகங்கள் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. ஃபிரான்சு அரசாங்கம் இந்திய மாணவ, மாணவிகளுக்கென ஒவ்வொரு வருடமும் 1.3 மில்லியன் யூரோ (11 கோடி இந்திய ரூபாய்) நிதியினை அரசு மற்றும் துணை அமைப்புகள் மூலம் வழங்குகிறது.
Charpak என்னும் திட்டத்தின் கீழ், பிரான்சு மற்றும் இந்திய கல்வி நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தத்திற்கு பெரும் நிதி வழங்கப்படுகிறது. இவை மூலம், முதுநிலைக் கல்வி, மாணவ, மாணவியருக்கான ஆராய்ச்சி உள்ளிறுப்புப் பயிற்சி (Research internships), மாணவ, மாணவியர் பரிமாற்றங்கள் ஆகியவைகளுக்கு முழுமையான நிதி உதவி கிடைக்கிறது.
https://www.inde.campusfrance.org/charpak-scholarship
இந்தியாவில் இருக்கும் பிரான்சு நாட்டுத் தூதரகம், அரசு, தனியார், தொழிற்சாலை நிறுவனங்களின் துணையோடு அறிவியல், பொறியியல், மேலாண்மைத் துறைகளுக்கான மாணவ, மாணவியருக்கு 500ற்கும் மேற்பட்ட ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதன் மூலம், 12 கோடி இந்திய ரூபாய் வழங்குகிறது.
https://www.inde.campusfrance.org/scholarships-for-indian-students
Raman-Charpak திட்டத்தின் கீழ், பிரான்சு நாட்டுத் தூதரகமும் இந்தியாவின் அறிவியல் தொழிற்நுட்பத் துறையும் (Department of Science and Technology) இணைந்து முனைவர் பட்ட ஆய்வினை இந்தியக் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு பிரான்சு நாட்டுக் கல்வி நிறுவனங்களில் 2 முதல் 6 மாதக்கால ஆராய்ச்சிப் பணிபுரிய பயணங்கள், வாழ்க்கைச் செலவு, ஆராய்ச்சிச் செலவிற்கென நிதி வழங்கப்படுகிறது. ஐரோப்பிய பிரான்சு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டுத்திட்டத்தின் கீழ், Eiffel Scholarship of Excellence, MOPGA என்னும் கல்வி உதவித்தொகை இந்திய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. முதுநிலைக் கல்விக்காக 12 மாதம் முதல் 36 மாதம் வரையிலான செலவுகளுக்கும் முனைவர் பட்ட ஆய்விற்காக 10 மாதக் காலம் வரையிலான செலவுகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது. அறிவியல், தொழிற்நுட்பங்கள், சமூக அறிவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை ஆகியத் துறைகளுக்கு இவ்வுதவிக் கிடைக்கிறது.
https://www.inde.campusfrance.org/eiffel_scholarship_2022
இவைகளோடு, பிரான்கோ-இந்திய கல்வி அறக்கட்டளை வழியாக, இந்தியாவில் இருக்கும் பிரான்சு நாட்டுத் தூதரக உதவியோடு, 2017 முதல் பல்வேறு ஊக்கத்தொகைகளும் இந்திய மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகள் மட்டுமின்றி ஆராய்ச்சியாளர்கள், பேராசியர்களும் பிரான்சு நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கல்விப் பயிற்சிகள் பெற்று வரலாம்.
https://www.inde.campusfrance.org/franco-indian-education-trust-0
பிரான்சு நாட்டுப் பல்கலைக்கழகங்கள்
ஃபிரான்சு நாட்டுப் பல்கலைக்கழக தகவல்களை https://about-france.com/universities.htm என்ற முகவரியில் காணலாம்.
முனைவர் விஜய் அசோகன், சுவீடன்
source https://www.vikatan.com/oddities/education/higher-education-in-europe-8-opportunities-and-openings-for-indian-students-in-france
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக