Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2.3 டன் விரலி மஞ்சளை க்யூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடத்தல் மஞ்சள் மூடைகள்

ராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தனமான சமையலுக்கு பயன்படுத்தும் விராலி மஞ்சள் டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கடத்தி செல்லப்படும் மஞ்சளுக்கு மாற்றாக இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்கள் தங்ககட்டிகளைக் கொடுக்கின்றனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்தும் இலங்கைக்கு மஞ்சள் மூடைகளை கடத்தி செல்லும் சட்டவிரோத பணியில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாள்களாக இலங்கைக் கடலோர பகுதிகளில் அதிகளவு மஞ்சள் மூடைகளை இலங்கைக் கடற்படையினர் மற்றும் போலீஸார் கைப்பற்றி வருகின்றனர். இதேபோல் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் கடத்தல் மஞ்சள் மூட்டைகள் அவ்வப்போது சிக்கி வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, க்யூ பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள் லிங்கபாண்டி, செல்வக்குமார், வெங்கடேஷபெருமாள் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரங்காடு கடற்கரைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடற்கரைப் பகுதியில் ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட போலீஸார் அவற்றை சோதனை செய்த போது அவை அனைத்திலும் மஞ்சள் இருந்தது தெரியவந்தது.

மஞ்சள்

இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக 93 சாக்கு பைகளில் வைக்கப்பட்டிருந்த 2,325 கிலோ மஞ்சள்களை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், இதில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் குறித்து விசாரனை நடத்தினர். இதில், தங்கச்சிமடம் காட்டுமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த இன்னாசி ஜிப்ரீஸ், ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜூ ஆகிய இருவரும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு அதிகம் இல்லாத காரங்காடு பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மஞ்சளைக் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இன்னாசி

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு அதிகம் இல்லாத காரங்காடு பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மஞ்சளைக் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

Also Read: பாம்பன்: 400 கிலோ மஞ்சள்; 750 கிலோ கடல் அட்டை - படகு பழுதானதால் சிக்கிய கடத்தல்காரர்கள்!

இதையடுத்து, அவர்கள் இருவரையும் தொண்டி காவல் நிலையத்தில் க்யூ பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். தொண்டி காவல் நிலைய போலீஸார் இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜூ

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட எல்லைகள் தோறும் போலீஸ் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இந்தநிலையில் பல்வேறு மாவட்டங்களை கடந்து ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கு சர்வசாதாரணமாக டன் கணக்கில் மஞ்சள் கடத்தி வரப்படுவது பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-two-arrested-for-trying-to-smuggle-2325-kgs-of-turmeric-to-sri-lanka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக