கடந்த ஏழு மாதங்களாக மக்கள் மனம்தோறும் விதவிதமான அச்சங்கள், சகல காரியங்களிலும் அவநம்பிக்கைகள். செய்து வந்த தொழில் முடங்கியுள்ளதே, பார்த்து வந்த வேலை போய்விட்டதே, இருக்கும் வேலை எப்போது போகுமோ, வாங்கிய கடனிலிருந்து மீள முடியுமா, கொடுத்த கடனை மீட்க முடியுமா... அப்பப்பா எத்தனை கவலைகள்... எத்தனை கலக்கங்கள்!
எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு உண்டு என்று நம்பிக்கை அளிப்பதே ஆன்மிகத்தின் பயன். அந்த வகையில் சகல அச்சங்களையும் தீர்த்து சௌபாக்கியம் அளிப்பவள் லோகமாதாவான துர்கை மட்டுமே. அன்னையே நமக்கு அபயம் அளிப்பவள். அவளைச் சரணடைந்தவருக்கு ஏது துயர்... நவராத்திரி நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துர்கை வடிவம் கொண்டு துயர் அழித்து நலமளித்த தேவி, இனி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நலமே அருள்வாள். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் நீடித்த ஆரோக்கியமும் அருள்வாள் என்பது சத்தியம்.
சைல புத்ரி, ப்ரம்ம சாரிணீ, சந்த்ர கண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காலராத்ரி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி என நவதுர்கைகள் தோன்றி அசுர சக்திகளை வென்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபோலவே வனதுர்கா, சூலினி துர்கா, ஷாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, ஜாத வேதோ துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸீரி துர்கா என ஒன்பது துர்கைகள் தோன்றி லோக மக்களைக் காத்தனர் என்றும் கூறுவதுண்டு.
ஒருமுறை ஆதி சங்கர பகவத் பாதர் 'ஆப்தி கிம் கரணீயம்’ (ஆபத்து காலத்தில் என்ன செய்ய வேண்டும்) எனும் கேள்வியைக் கேட்டு, அதற்குரிய பதிலையும் தந்தார்.
'ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:’ அதாவது, அம்பாளின் பாத கமலங்களை நினை என்று விடையளிக்கிறார். எனவே உங்களின் சகல துக்கங்களையும் நீக்க, சந்தோஷ வாழ்வைப் பெற ஆன்மிக ஆன்றோர்கள் வழி காட்டியுள்ளார்கள் அதுவே, நவதுர்கா ஹோமம்.
இந்த நவதுர்கா ஹோமத்தில் ஒவ்வொரு துர்கைக்கும் ஒரு கலசம் வைத்து, ஶ்ரீதுர்காசூக்தம் ஜபம் மற்றும் ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி நடைபெறும். பின்னர் கலசங்கள் பிரதட்சிணமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
இந்த நவதுர்கா ஹோமத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் எதிரிகளின் தொல்லை, கடன் பிரச்னை, பெருந்தொற்றுப் பிணிகள் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றன சாஸ்திரங்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிலாக்கியமான ஹோமம் நவதுர்கா ஹோமம். இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்தவர் வீட்டில் வறுமை அண்டாது. அச்சம், கவலை, அவநம்பிக்கைகள் சூழவே சூழாது என்பது உண்மை. உங்களின் வாட்டி வதைக்கும் எந்தத் துன்பத்துக்கும் இந்த ஹோமம் நிச்சயம் ஒரு தீர்வை அளிக்கும். அம்பிகையை நம்புங்கள், ஆதரவுகள் பெருகும். வளங்கள் சேரும்.
நவராத்திரியின் 9 நாள்களும்... நல்லவர்களைக் காப்பாற்ற தீயவர்களான ரக்த பீஜன், தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் போன்றோரை அழித்த எல்லாம் வல்ல மகிஷாசுர மர்த்தனியின் பாதம் பணியுங்கள், ஆன்ம பலத்தைப் பெறுங்கள்!
நலமருளும் நவராத்திரி விழாவை ஒட்டி உங்கள் சக்தி விகடனும் பெரிய வெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சித்தர் பீடமும் இணைந்து நடத்தும் நவதுர்கா ஹோமம், செங்கல்பட்டு மாவட்டம் பெரியவெளிக்காடு கிராமம் அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வாசகர்களும் பங்கேற்று சங்கல்பிக்கலாம்.
வாசகர்களின் கனிவான கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), பெரியவெளிக்காடு அருள்மிகு வெக்காளி அம்மன் சந்நிதியில் விசேஷமாய்ப் பூஜிக்கப்பட்ட - அம்மன் டாலருடன் கூடிய காப்பு ரட்சை ஆகியவை ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (19.10.20 திங்கள் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் யூடியூப் சேனல் மற்றும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!
இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/spiritual/functions/navadurga-homam-event-to-be-conducted-by-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக