காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் போராட்டம்!
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். போராட்டத்துக்கு முன்பாக அங்கிருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களுடன் வயலில் இறங்கி ஸ்டாலின் பேசினார்.
Also Read: `சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்... 8 மாதங்களில் ஆளுங்கட்சி!’ -தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு
போராட்டத்தில் பேசிய ஸ்டாலின்,``தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர்தான், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்துக்கு அ.தி.மு.க துணைபோயிருக்கிறது. ஏழைத்தாயின் மகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியால்தான் புதிதாக ஏழைகள் உருவாகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களை இந்தியாவே எதிர்க்கிறது'' என்று பேசினார்.
போராட்டத்தில் டிராக்டர் எரிப்பு!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது டிராக்டர் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.
Also Read: `வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!’- பாஜக-வுடன் 24 வருட கூட்டணி.. வெளியேறியது சிரோமணி அகாலிதளம்
source https://www.vikatan.com/news/general-news/28-09-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக