``மானாவாரி நிலமாக இருந்தாலும், இறவைப் பாசன நிலமாக இருந்தாலும் ஒரே பயிரை அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதைவிட, பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் தொடர் மகசூல், கணிசமான வருமானம் உறுதியாகக் கிடைக்கும்'' என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவராமையா.
``ஒரு வருஷமா ஒரு ஏக்கர்ல மேட்டுப்பாத்தி முறையில காய்கறி, படர் கொடி, சின்ன வெங்காயம், கீரைகளைச் சாகுபடி செய்திட்டு இருக்கேன்" என்றவர், மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செய்வது குறித்து கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...
சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். மண் நன்கு பொலபொலப்பாக இருப்பது அவசியம். பிறகு, 50 அடி நீளம், 3 அடி அகலம், 1.5 அடி உயரத்தில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளின் இடைவெளி 1.5 அடி.
ஒவ்வொரு பாத்தியிலும் 50 கிலோ கன ஜீவாமிர்தத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். 2 அடி இடைவெளியில் காய்கறி நாற்றை நடவு செய்ய வேண்டும். காய்கறிகளுக்கு இடையில் அகலவாக்கில் மண்ணில் கோடிட்டு கீரை விதையைத் தூவ வேண்டும். 10 அடி இடைவெளியில் படர்கொடி விதைகளை (3 விதைகள்) ஊன்ற வேண்டும். பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் சின்ன வெங்காயம் ஊன்ற வேண்டும்.
காய்கறி என்றால் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை.
படர்கொடிகள் என்றால் புடலை, பீர்க்கன், பாகல், சுரை, வெள்ளரி.
கீரைகள் என்றால் பச்சைத்தண்டு, சிவப்புத்தண்டு, சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை.
ஓரங்களில் முள்ளங்கி, சின்ன வெங்காயம், நிலக்கடலை (சுழற்சி முறையில்), இதில் ஒரு பாத்தியில் நடவு செய்யும் செடி, கொடி வகைகள் அடுத்த பாத்தியில் இடம்பெறாது. காய்கறி நாற்றுகள் 18 முதல் 25 நாள் வயதுடையதாக இருக்க வேண்டும்.
நாற்றுகளையும் விதைகளையும் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து நட வேண்டும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வரலாம். மேட்டுப்பாத்தியைப் பொறுத்தவரையில் சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
7-ம் நாளில் முதல் களை எடுக்க வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் (6 பாத்திகளுக்கு 30 லிட்டர்) கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 முதல் 35-ம் நாளில் கீரையை அறுவடை செய்துவிடலாம்.
பிறகு, கீரை அறுவடை செய்த இடத்தில் மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு பாத்தியிலும் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் காய்கறி, படர்கொடி ஆகியவற்றை அறுவடை செய்யலாம்.
- திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பனையங்குறிச்சியில் உள்ளது சிவராமையாவின் வயல்.
மேட்டுப்பாத்தி முறையில் அவர் லாபம் ஈட்டி வரும் அனுபவத்தை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க கிளிக் செய்க - https://bit.ly/3jf3b4h
மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி! https://bit.ly/3jf3b4h
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube
source https://www.vikatan.com/news/agriculture/farmer-shares-tips-to-cultivation-in-raised-bed-farming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக