Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

மகளின் `க்யூட்' மீசை! - குட்டி ஸ்டோரி #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அழகாய் காலைப்பொழுது விடிந்தது.

கட்டிலில் குட்டிப்பெண், சுட்டிப்பெண் 4 வயது ஆராதனா குப்புறப் படுத்திருந்தாள்.

ஆகாஷ் எழுந்தான். கண்களைத் துடைத்து அருகில் படுத்திருக்கும் மகள் ஆராதனாவைப் பார்த்தான்.

பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். பின் குப்புறப்படுத்திருக்கும் மகள் ஆராதனாவை விட்டத்தை பார்த்தவாறு மல்லாக்கப் படுக்க வைத்தான்.

அந்த அசைவிலும் கண் திறக்காமல், கை, கால்களை முறுக்கியவாறு படுத்துறங்கினாள் ஆராதனா.

மகளைப் பார்த்து ஆகாஷ் மகிழ்ந்துபோனான்.

Representational Image

இன்று அழகான ஓர் ஓவியத்துடன் காட்சியளித்தாள் ஆராதனா.

அதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான் ஆகாஷ்.

அவன் மகிழ்வுக்குக் காரணம், மகள் ஆராதனாவின் மோவாயில் ஒரு பக்கத்தில் அழகான ஒரு குட்டி வெள்ளை மீசை முளைத்திருந்தது.

அதைப் பார்த்துதான் மகிழ்ந்துகொண்டிருந்தான் ஆகாஷ். அழகான அந்தக் குட்டி வெள்ளை மீசையை இமைகொட்டாமல் ரசித்துக்கொண்டேயிருந்தான்.

நேற்று மாலை ஆராதனா பூங்காவில் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தாள்.

ஊஞ்சல் விளையாடியது, சறுக்கல் விட்டது, ரவுண்டு சுத்தியது, டவர் மீது உள்ள கம்பிகளில் ஒவ்வொரு கம்பியையும் பார்த்து, பார்த்துப் பிடித்து ஏறியது... என இப்படி பூங்காவில் உள்ள எல்லா விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தாள்.

அவள் அங்குமிங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருந்ததன் அசதிதான், இன்று தூங்கும்போது அவள் கடைவாய் எச்சில் காய்ந்துபோய், அவள் மோவாயில் ஒரு பக்கத்தில் அழகான ஒரு குட்டி வெள்ளை மீசையை வடித்திருந்தது.

அந்த அழகான குட்டி வெள்ளை மீசையைப் பார்த்து ஆகாஷ் ரசித்துக்கொண்டிருக்க, மனைவி காவ்யா, 'என்னங்க டைம் ஆச்சு... இன்னும் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?' என்று கேட்டுக்கொண்டே பெட்ரூம் உள்ளே இருந்த ஆகாஷிடம் வந்தாள்.

Representational Image

கணவன், மகளையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

"என்னங்க, பொண்ணை அப்படி என்ன பார்த்துக்கிட்டிருக்கீங்க?''

"அங்க பாத்தியா... அவளோட மோவாயில எவ்வளவு அழகா ஒரு குட்டி வெள்ளை மீசை முளைச்சிருக்கு?''

"அட ஆமா... ச்சோ ஸ்வீட்ங்க!"

"என்னோட மொபைல எடு காவ்யா... போட்டோ எடுப்போம்!"

"அச்சச்சோ வேண்டாங்க..."

"என்ன காவ்யா... இந்த அழகான காட்சியை அப்படியே விட்டுடச் சொல்றியா? இந்தத் தருணம் எப்படிப்பட்ட ஒரு அழகான தருணம்! அதை மிஸ் பண்ணச் சொல்றியா? இப்ப எடுக்குற இந்த போட்டோவை அவ லைஃப் ஃபுல்லா பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டே இருப்பா... அப்படி ஒரு பொக்கிஷம்தான் இந்த அழகான வெள்ளை குட்டி மீசை!"

ஆகாஷ் சொல்லியதைக் கேட்டு மகிழ்ந்துபோன காவ்யா, செல்போனை எடுத்து வந்து ஆகாஷிடம் கொடுத்தாள்.

ஆகாஷ் அந்த பொக்கிஷத்தைப் படம் பிடித்தான்.

அழகான அந்தக் குட்டி வெள்ளை மீசை காலத்துக்கும் ஆராதனாவை சந்தோஷப்படுத்த பதிவானது.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/father-shares-about-his-daughters-candid-moment-in-a-short-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக