Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

`ஹலோ... நான் உங்கள் இதயம் பேசுகிறேன்!' - இதய ஆரோக்கியத்திற்கான ஓர் இலவச வழிகாட்டல்

ஒரு மனிதனின் இதயத்துடிப்புதான் அவன் உயிரோடு இருக்கிறான் என்பதற்குச் சான்று. உலக அளவில் இறப்புகளுக்கு முதல் காரணமாக இருப்பது இதய ரத்தநாள நோய்கள்தாம். ஆண்டுதோறும் 1.79 கோடி பேர் இந்த நோயால் உயிரிழக்கிறார்கள். இதில் மூன்றில் ஒருவர் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்.

Health

உடலுழைப்பு இல்லாமை, சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்டவை இதயத்தின் ஆரோக்கியத்துக்கு எதிரானவை. இதய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் 'ஹலோ.. நான் உங்கள் இதயம் பேசுகிறேன்!' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் இதய ஆரோக்கியத்துக்கான டிப்ஸ், ஆரோக்கிய உணவுப் பழக்கம் குறித்த வழிகாட்டல், இதயப் பிரச்னைகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி, பைபாஸ் சர்ஜரியைத் தவிர்ப்பது எப்படி, இளைஞர்களும் இதய நோய்களும், கோவிட்-19 காலத்தில் இதயப் பராமரிப்பின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

heart day

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூத்த இதய மருத்துவர் ஆர்.சிவக்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குவார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றுக்கும் மருத்துவர் விடையளிப்பார். கட்டணமில்லா இந்த ஆன்லைன் பயிலரங்கில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் நாள்: செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 முதல் 11 மணி வரை

பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும். https://bit.ly/3hEhzBv



source https://www.vikatan.com/health/healthy/aval-vikatan-and-meenakshi-mission-hospitals-event-on-world-heart-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக