Ad

வியாழன், 17 செப்டம்பர், 2020

ராமநாதபுரம்: இரண்டரை பவுன் நகைக்காகப் பெண் கொலை? - சிக்கிய ஐஸ் வியாபாரி

ராமநாதபுரம் அருகே நகைக்காக பெண் கொலசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஸ் வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட விஜயராணி (பழையபடம்).

ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மனைவி விஜயராணி (52). இவர்களுக்கு 3 பிள்ளைகள். மூவருக்கும் திருமணம் ஆன நிலையில், காமராஜரும் இறந்து போனார். இதனால் இரட்டையூரணியில் உள்ள தனது வீட்டில் விஜயராணி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நிலையில் விஜயராணி

இந்நிலையில் விஜயராணி உடலில் ரத்தக் காயங்களுடன் நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் துரிதப்படுத்தினார். விசாரணையில் விஜயராணி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயின் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால், நகைக்காக விஜயராணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தினர்.

Also Read: ராமநாதபுரம்: நிலம் அபகரிப்பு; கொலை மிரட்டல்! - கலெக்டர் ஆபிஸில் தீக்குளிக்க முயன்ற நபர்

இதையடுத்து விஜயராணியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக விஜயராணிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஐஸ் வியாபாரி பாலமுருகன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உச்சிப்புளி காவல் நிலையம்.

பாலமுருகன் குடியிருந்த வீடு பூட்டியிருந்ததால் சந்தேகம் வலுத்த நிலையில், போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு ஐஸ் வியாபாரி பாலமுருகனை அவரது சொந்த ஊரான சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தில், உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பாலமுருகனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-woman-killed-over-gold

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக