கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸின் பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்நிலையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கட்சி பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில் தேமுதிக சார்பில், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/dmdk-chief-vijayakanth-admitted-in-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக