Ad

வியாழன், 3 செப்டம்பர், 2020

பிராண சக்தி யோக நிலையின் நான்காம் பயிற்சி... பிரபஞ்ச ஆற்றலை ஆதாரங்களுக்குள் அனுப்பும் முறை!

உடலுக்குள் நுழைந்து அற்புத ஜீவசக்தியாகப் பரவும் பிராண ஆற்றல் நம் உடலின் ஆதார சக்கரங்களுக்குள் பயணிக்க வேண்டும். அதுவே பிராண சக்தி யோக முறையின் முழுமையான பலனை அளிக்க வல்லது. மனித உடல், பல கவசங்களாகப் பல வேறுபட்ட அலை வரிசையில் அதிர்வுகளை உருவாக்கிய வண்ணமே இருக்கிறது. இறையின் அம்சமாக தோன்றிய இந்த உடலின் அருமையை உணராமல் வீணடிக்கிறோம். அதனால் முறையற்ற தெளிவற்ற வாழ்க்கையால் நோய்களின் பிறப்பிடமாக உடல் மாறிவிடுகிறது.

பிராண சக்தி யோகா முதல் பயிற்சி

இந்நிலையை மாற்றவே பிராண சக்தி யோகா பயன்படுகிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் எனும் இந்த ஏழு சக்கரங்களும் மனிதரை சித்தர்கள் நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் கொண்டவை. பிரபஞ்சத்தில் உள்ள பிராண சக்தியை இந்தச் சக்கரங்களுக்குள் செலுத்துவதன் மூலம் தெய்விக நிலையை உணரமுடியும். இந்த சக்கரங்களில் பிராண சக்தி நிலை தூண்டப்படும்போது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதில் முக்கியமானது நோயற்ற வலிமையான வாழ்வு.

Also Read: சூட்சும திருஷ்டியை நேர்மறை ஆற்றலாக மாற்றி உடலை மனதை வளப்படுத்தும் பிராண சக்தி யோகா!

  • இந்தப் பயிற்சிகளை தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும்.

  • இரவில் செய்வது கூடாது. மூச்சு சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கல் வரலாம். சூர்ய பகவானே பிராண சக்தியின் அதிபதி என்பதால் சூரியன் உதிக்கும் இளம்காலை அல்லது அந்தி மாலை நேரம் உகந்தது.

  • உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியைச் செய்ய வேண்டும்.

  • நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

யோகா
  • உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. மிகுந்த பசியிருப்பின் கொஞ்சமாகக் கஞ்சி அல்லது பழங்கள் எடுத்துக்கொண்டு செய்யலாம்.

  • உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 6.9.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/participate-in-prana-sakthi-yoga-online-event-conduced-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக