Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

எப்படி செய்யலாம் ஜீரோ பட்ஜெட் விவசாயம்... உங்களுக்கு வழிகாட்ட வருகிறார் சுபாஷ் பாலேக்கர்!

இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பசுமை விகடன் சார்பாக எண்ணற்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மரம் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு, மூலிகை வளர்ப்பு எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளுக்கு வாசகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து இயற்கை விவசாயத்தின் பிதாமகர் பத்மஶ்ரீ சுபாஷ் பாலேக்கர் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ‘சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை (ஜீரோ பட்ஜெட்)’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சி வருகிற 26-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஆங்கில வழியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சயாக நடத்தப்பட உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

முன்பதிவு செய்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சுபாஷ் பாலேக்கர்

பசுமைப் புரட்சியின் விளைவுகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அதைச் சரிசெய்யும் முறைகளைப் பற்றி விளக்கமாக பேச இருக்கிறார் சுபாஷ் பாலேக்கர். ஒரு நாட்டு மாட்டை வைத்தே பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும். எனவே இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் அவசியத்தைப் பற்றி பேச இருக்கிறார். இதோடு இயற்கை விவசாயத்தின் முக்கிய இடுபொருளாகிய ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட இடுபொருள்களைத் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பேச இருக்கிறார். இந்த இடுபொருள்கள் மட்டும் பண்ணையில் இருந்தால் போதும் பல ஆயிரங்களில் விவசாயச் செலவைக் குறைக்கலாம்.

மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதற்கு மூடாக்கு முறை மிகவும் அவசியம் என்று சுபாஷ் பாலேக்கர் வலியுறுத்தி வருகிறார். மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தண்ணீர் செலவு மிச்சமாகும். இந்த நுட்பத்தை வாழை, தென்னை, மா, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட பயிர்களில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது தண்ணீர் செலவைக் குறைப்பதோடு மண்ணின் வளத்தையும் மேம்படுத்துகின்றது. மண்ணில் அங்ககச் சத்தை அதிகரிக்கிறது. இந்தச் சூத்திரத்திதையும் சொல்லிக் கொடுக்க இருக்கிறார். பாலேக்கர் சொல்லும் இயற்கை விவசாய நுட்பங்களைப் பின்பற்றினால் பூச்சித் தாக்குதலும் இருக்காது. அதனால் பூச்சிக்கொல்லி போன்ற விஷங்களைப் பயன்படுத்த தேவையில்லை. ரசாயன உரங்களுக்குச் செலவிடும் தொகையும் மிச்சமாகும்.

க்யூ.ஆர் கோட்

முன்பதிவு செய்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

இந்த இயற்கை விவசாய சூத்திரங்கள் குறித்து 3 மணி நேரம் விரிவாகப் பேச இருக்கிறார் சுபாஷ் பாலேக்கர். மறந்துவிடாதீர்கள் வருகிற 26-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை. முன்பதிவுக்கு இந்த லிங்கில் செல்லவும். அல்லது இந்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூம் லிங்க் அல்லது பசுமை விகடன் முகநூல் லிங்க் மெயில் வழியாக அனுப்பப்படும்.

முன்பதிவு செய்ய முடியாதவர்கள் சனிக்கிழமை மாலை பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் நேரலையில் சுபாஷ் பாலேக்கரின் பேச்சைப் பார்க்கலாம்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/chance-to-participate-in-pasumai-vikatan-zero-budget-farming-training-by-subhash-palekar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக