Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வாவ்... ஸ்கூட்டர் டிசைனிங்கில் வேலை வாய்ப்பு... மோட்டார் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிலரங்கம்!

ஒருபுறம், படித்த படிப்புக்குச் சரியான வேலை கிடைக்கவில்லை என்று சிலர் அல்லல்படுவதும்... இன்னொருபுறம்... வேலைக்குச் சரியான கேண்டிடேட்ஸ் கிடைக்கவில்லை என்று பல ஹெச்ஆர்கள் அங்கலாய்ப்பதும் ஒரே ஊரில் ஒரு ஏரியாவில் ஒரே சமயத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தொழில் நிறுவனங்களும், பன்னாட்டு கம்பெனிகளும் தேடும் அந்த கேண்டிடேட்ஸ் எப்படி இருப்பார்கள்? மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தகுதிகள் அவர்களுக்கு என்ன இருக்கும். அந்தத் தகுதிகள் நமக்கு இருக்கிறதா... அல்லது ஏதாவது குறைகிறதா... குறைகிறது என்றால் அந்தக் குறையை எப்படிச் சரிசெய்து கொள்வது... அதற்கு BE/B.Tech தாண்டி என்ன படிக்க வேண்டும்... பொறியியல் படித்து முடித்த அல்லது படித்துக் கொண்டிருக்கும் பல இளைஞர்களின் மனக்குரல் இப்படியாகத்தான் இருக்கிறது.

ஒரு நல்ல வேலைக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது அதாவது Job Ready ஆவதற்கு அசகாய சாதனைகளை எல்லாம் செய்ய வேண்டியதில்லை. சரியான துறையில், சரியான கம்பெனியில், சரியான வேலைக்கு, முயற்சி செய்தால்... ‘டாப்பில் வர... ஆடி முடிஞ்சி முடிஞ்சி ஆவணி வரும்வரை’ காத்திருக்க வேண்டியதில்லை. கிக்-ஸ்டார்ட் பண்ணாமல், செல்ஃப்-ஸ்டார்ட்டிலேயே நம் கரியரை டாப்-கியரில் எகிற வைக்கலாம்.

Two Wheeler Designing

இதில் நமக்குத் தெரியவேண்டியதெல்லாம்... ‘எந்தத் துறையில் எந்த மாதிரி வேலைகளுக்குத் தேவைகள் இருக்கின்றன?’, ‘இந்த வேலையைச் செய்வதற்கு என்ன மாதிரி ‘ஸ்கில்-செட்ஸ்’ எதிர்பார்க்கிறார்கள்?’... என்ற இரண்டே இரண்டு தகவல்கள்தான்.

ஆன்லைன் வாயிலாக செப்டம்பர் 26-ம் தேதி நடக்கயிருக்கும் கட்டணமில்லாத இந்த 'Job opportunities in Automotive industry' அறிமுகப் பயிலரங்கத்திற்கு பதிவு செய்ய... https://bit.ly/35zncyH

ஆட்டோமொபைல் துறை இதில் முக்கியமானது, ஆட்டோமொபைல் என்றால் முதலில் நம் நினைவுக்கு வரும் பெயர் டிவிஎஸ். ஹூண்டாய், ஃபோர்டு, நிஸான், ரெனோ, டட்ஸன், பிஎம்டபிள்யூ, யமஹா என்று சென்னையைச் சுற்றி இப்போது ஏராளமான கார்-பைக் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது போன்ற சர்வதேச நிறுவனங்கள் எல்லாம் இங்கே வர பாதை போட்டது டிவிஎஸ் போன்று தமிழக மண்ணில் வேர்விட்டு முளைத்த நிறுவனங்கள்தான். டிவிஎஸ் மோட்டார்ஸ் ஹெச்ஆர் துறையின் கார்த்திக்குக்கு இந்தத் துறையில் இருக்கும் நெளிவு சுளிவுகள் அனைத்தும் அத்துப்படி. அவரது கம்பெனிக்குத் தேவையான கேண்டிடேஸ்ஸைத் தேர்வு செய்யும் பொறுப்பையும் நேர்த்தியாக செய்துகொண்டிருப்பவர்.

Mr. Amit Rajwade -Head of Scooter Design, TVS Motor Company

‘’ஆட்டோமைபைல் கம்பெனியின் தொழிற்சாலை என்றால் அதில் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும் இடம் அசெம்ப்ளி யூனிட். அதாவது பைக்கோ காரோ உற்பத்தி செய்யப்படும் ஷாப்-ஃப்ளோர். அதைத் தாண்டி, தொழிற்சாலையிலேயே சோர்ஸிங், இன்வன்ட்ரி, குவாலிட்டி அஷ்யூரன்ஸ், டெஸ்டிங், லாஜிஸ்டிக்ஸ்,அட்மின், பைனான்ஸ் என்று பல துறைகள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும்விட முக்கியமாக பி.இ மற்றும் பி.டெக் பட்டதாரிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுக்கும் R&D... அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையும் இருக்கிறது. இதில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு மாதிரியான ‘ஸ்கில் செட்ஸ்’ தேவைப்படும்.

‘தங்களோடு நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர் தங்களைவிட குறைவான மதிப்பெண்ணோ கல்வித் தகுதியோ கொண்டவரா இருந்தும் அவருக்கு வேலை கொடுத்துவிட்டார்கள். தனக்குக் கொடுக்கவில்லை’ என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். உண்மைதான் இப்படி பல சமயங்களில் நடக்கும். எங்களைப் போன்ற கம்பெனிகள் ஒருவருக்கு என்ன மாதிரி SKILLS இருக்கிறது என்று பார்ப்பதைவிட, அந்த வேலையைச் செய்ய WILL இருக்கிறதா என்றுதான் முக்கியமாகப் பார்ப்போம். காரணம், ஸ்கில் என்பது பயிற்சி எடுத்தால் வந்துவிடும். ஆனால் குறிப்பிட்ட அந்த வேலையை ஈடுபாட்டோடு செய்ய தேவையான ஆர்வம், முனைப்பு ஆகியவை எல்லாம் ‘வேலை செய்ய வேண்டும்’ என்ற WILL இருந்தால்தான் வரும்’’ என்றார்.

Mr. Karthik - DGM (Human Resources), TVS Motor Company

‘’ஸ்கூட்டர் டிசைனிங் என்பது லேசுப்பட்ட காரியமில்லை. கலை ஞானமும், பொறியியல் அறிவும் சம விகிதம் தேவைப்படும் துறை இது. இந்த விகிதம் ஒருவருக்கு பிடிப்பட்டுவிட்டால்... அவர் கேட்கும் பதவியையும், சம்பளத்தையும் தாராளமாகக் கொடுக்க கம்பெனிகள் ஒன்றோடு ஒன்று போட்டி போடும். ஒருவருக்கு ஆட்டொமொபைல் டிசைனிங் வசப்பட வேண்டுமென்றால்... அதற்கு பெளதிக சூத்திரங்களும், கணித சமன்பாடுகளும் மட்டும் போதாது. இடைவிடாத பயிற்சியும் வேண்டும். இந்தப் பயிற்சியை எப்படி மேற்கொள்வது. என்ன பயிற்சி மேற்கொள்வது?

டிவிஎஸ் ஸ்கூட்டர் டிசைன் துறைக்குத் தலைவராக இருக்கும் அமீத் என்கிற அமீத் ராஜவாதே இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க கடவுச் சீட்டை எப்படி பெறுவது என்ற ரகசியத்தை பயிலரங்கத்தின் போது உடைக்க இருக்கிறார்.

Scan this QR Code to Register
நாள்: 26 செப்டம்பர் 2020 | நேரம் : காலை 10 to 12 மதியம் / இந்தியா (IST) |

அறிமுகப் பயிலரங்கத்திற்கு பதிவு செய்ய: https://bit.ly/35zncyH



source https://www.vikatan.com/automobile/motor/tvs-scooter-design-and-career-opportunities-in-the-automotive-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக