பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
நேற்று எனக்கும் என்னவளுக்குமான விவாதத்தில் ஏற்பட்ட கோபத்தில் காலையிலேயே அவளது அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்...
அது அவ்வளவு பெரிய காரணம் கூட கிடையாது... அவளுக்கு சிலிண்டர் மாற்ற பயம். இந்த கொரோனா தந்த வொர்க் பிரம் ஹோம் கலாச்சாரத்தால் காலை எட்டு மணிக்கே ஜூமில் மீட்டிங் உட்கார்ந்து விட்டேன். ஒன்பது மணியிலிருந்து நான்கைந்து முறை வந்து சொல்லி விட்டாள்... பத்தரைக்கு முடிந்த மீட்டிங்கில் கேட்கப்பட்ட டேட்டாக்களை அனுப்புவதில் மூழ்கிவிட்டேன்...
பதினோரு மணி இருக்கும் எல்லாம் அனுப்பி விட்டு என்னவளிடம், ``டயார்டாருக்கு ஒரு நல்ல உன்னோட ஸ்பெசல் இஞ்சி டீ குடேன்'', என்றேன்... எனக்கு தோசை ஊற்றி கொடுத்ததோடு தீர்ந்திருக்கிறதுபோல... அவளுக்கு சாப்பிட ஒன்றுமில்லாமல் இருந்திருக்கிறது... அதற்கு மேல் நடந்தவற்றை சொல்லத் தேவையில்லை...
மாலையில் அளவில்லாமல் மிகவும் எரிச்சலாக இருந்தது. எத்தனையோ சேனல்கள் மாற்றி மாற்றி போரடிக்கவே ஆயிரம் ரூபாய் கட்டி புதுப்பித்த அமேசான் பிரைமில் படம் பார்க்கலாமே என்று தோன்றியது. அதுவும் ஆங்கிலத் திரைப்படங்கள் அவளிருந்தால் முடியாது...
ரஸ்ஸல் க்ரோவ் நடித்து 2020 வந்த படம் அன்ஹின்ஜ்ட் (unhinged) என் சஜெஸ்டட் லிஸ்ட்டில் காட்ட செலக்ட் செய்துவிட்டு, வாங்கி வைத்திருந்த சாப்பாட்டுடன் டீவியின் முன் உட்கார்ந்தேன்.
சாப்பாடு காலியானதுக் கூட தெரியாமல் ஒன்றரை மணி நேரம் முடிந்துவிட்டது...
மனதளவில் காயப்பட்ட அவமானபடுத்தப்பட்ட ஒருவருக்கு ஏற்படும் மனப்பிறழ்வு எத்தகைய அழிவைத் தரும் என்பதை பார்க்கும்போது நாம் சாதாரணமாக ஏற்படுத்தி விடும் மிகச்சிறு அவமானம் கூட நம் அன்பானவர்களைக்கூட கொடூரமாகக் காயப்படுத்தும் என்பதை புரியும்படி பொடனியில் தட்டி புரியவைக்கும் படம். ஹார்ன் அடித்த சண்டை வரிசையான கொலை வரை செல்லுமா...?!!!
ரஸ்ஸல் க்ரோவ் - கிளாடியேட்டரகாவும் ராபின்ஹூட்டாகவும் பார்க்கப்பட்டவர் இந்தப் படத்தில் மிரட்டும் முகபாவம் உடல்மொழி கண்ணசைவு என அனைத்திலும் பயமுறுத்துகிறார். துவக்கத்தில் காட்டும் காட்சிக்குக் காரணமான நிகழ்வை ரெஸ்டாரண்டில் கொலை செய்யும்போது புரியவைக்கிறார். உதாசீனப்படுத்துதல் மற்றும் உதாசீனப்படுத்தப்படுதல் இரண்டையும் ஒன்றரை மணி நேர படமாய் பதற்றத்தை குறையாது படமாக்கியிருக்கிறார்கள்.
தன்மீதான தவற்றை கூறி மன்னிப்புகேட்டுவிட்டு நீங்களும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள் எனும்போது அவர் கண்ணில் தெரியும் உதாசீனத்தின் வலி மீண்டும் உதாசீனப்படுத்தப்படும்போது வீரியமாகும் கோபம் என மிக அழகாய் சிறுசிறு உடல்மொழியிலேயே காட்டிவிடும் அந்த நடிப்பின் பிரமிப்பு மீண்டும் க்ளாடியேட்டரில் அமைதியாய் போகும் மேக்சிமசுடன் ஒப்பிடத் தோன்றியது...
எனக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்...
கேட்டிருக்கவேண்டிய நேரத்தில் கேட்டிருக்கவேண்டிய மன்னிப்பு தனது ஆணவத்தால் தான் எப்போதும் சரியே எனும் எண்ணம் பிறகு எத்தனையோ பேரிடம் எத்தனையோமுறை கேட்டும் பலனின்றி தன் இயலாத்தனத்தை உணரும்போது நமக்கும் புரிகின்றது... சரியான நேரம் எப்போதும் இதுவே... நாளை காலை... இல்லையில்லை நேரில் பார்க்கும்போது... இல்லையில்லை நேரம் வரும்போது... (ஒருவேளை தவறு அவர்களுடையது என அதற்குள் நிரூபிக்க வாய்ப்பு அமைந்துவிட்டால்) என அன்பைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய நேரத்திலும் ஆணவமாய் இருப்பதையே பெரும்பாலோனோர் தேர்வுசெய்கிறோம். அன்பிருக்குமிடத்தில் ஆணவமேன்..! யாரிடமும் பதிலிருப்பதில்லை.
நம் மனதிற்கு தவறென்று நன்றாகத் தெரிந்திருந்தும் இவரிடம்போய் நான் மன்னிப்பு கேட்பதா... என்ற எண்ணம் ஏன்..?
ஹலோ... என்னை மன்னிச்சுக்கடா... இல்லமா என் தப்புதான்... சாரிடா... ஒகேடா... வந்து கூப்டுக்கறேன்டா... சாரி எல்லாத்துக்கும் சேர்த்து...
- சுக்கிரன் (சுந்தரராமன்)
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ
தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle
source https://www.vikatan.com/lifestyle/relationship/impact-of-unhinged-movie-in-readers-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக