Ad

சனி, 27 மார்ச், 2021

பாஜக-வில்தான் இருக்கிறேன், ஆனால் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன் - எஸ்.வி.சேகர்

எப்போதுமே டிரெண்டில் இருக்கும் எஸ்.வி.சேகர், தேர்தல் சமயத்தில் சைலண்ட் மோட்டுக்குப் போய்விட்டாரே... என்று நினைத்தால் `நான் இங்க ஆக்டிவ்வாகதான் இருக்கேன் பாஸ்.' என ஆஜராகிறார்.


``பா.ஜ.க-வில்தான் இருக்கீங்களா?"

``ஆமாம்... நான் பா.ஜ.க-வில்தான் இருக்கிறேன். ஆனால், அது பா.ஜ.க-விற்கு தெரியுமா? தெரியாதானு தெரியலை. நான் கட்சியிலிருந்து விலகியில்லை. விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன். மோடி அட்வைஸ் படிதான் பா.ஜ.க-வில் சேர்ந்தேன். 1990-ல் இருந்தே பா.ஜ.க அனுதாபியாக இருந்திருக்கிறேன். `நீங்க பார்ட்டி அரசியலுக்கு வர மாதிரி இருந்தால் அ.தி.மு.க-வுக்கு வாங்க. ஆனால், நாங்களே கூப்பிடமாட்டோம்'னு ஜெயலலிதா சொன்னாங்க. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் வாஷ்அவுட் ஆனது.

எஸ்.வி.சேகர்

நான் வெற்றிக்குப் பின்னாடி ஓடுபவன் அல்ல. வெற்றி என்னால் வர வேண்டும் என நினைப்பவன். அதனால், நானே ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்து அ.தி.மு.க-வில் இணைந்தேன். அதன்பின் அந்த கட்சியிலிருந்து என்னை நீக்கினார்கள். கவலைப்படவில்லை. இப்போது பா.ஜ.க-வில் இருக்கிறேன். என்னைப் பயன்படுத்திக்கொண்டால் பா.ஜ.க-வுக்கு நல்லது. இல்லை எனில் எனக்கு எந்த நஷ்டமுமில்லை."

``எல்.முருகனின் செயல்பாடு எப்படி உள்ளது?''

``முருகனின் `வேல் வேல்... வெற்றி வேல்' அந்த யாத்திரை வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு முருகனுக்குத்தான் வாழ்த்துகள் சொல்லணும். இந்த தேர்தலில் தமிழக பா.ஜ.க 14 சதவிகித வாக்குகளை வாங்கும் என நான் கணிக்கிறேன். இந்துக்கள் வாக்கு வாங்கி இங்குப் பெரிது. `என்னப்பா... எப்போ பார்த்தாலும் நம்மையே திட்டிக்கொண்டிருக்கிறார்கள்?' என இந்துக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த வாக்குகள் எல்லாம் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத்தான் வரும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்."

Also Read: ஆதாரிலிருந்து மொபைல் எண் எடுத்ததா பாஜக? - தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி

``என்னைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டால் கட்சிக்கு நல்லதுனு சொல்லுறீங்க. ஆனாலும் உங்களை பாஜக தரப்பு அழைப்பதில்லையே..."

``ஆமாம். அந்த நட்சத்திர பேச்சாளர்கள் 30 பேர் லிஸ்ட்ல என் பேர் போடவில்லை. போடலைனு சொன்ன பிறகு என்னை சேர்த்துக்கோங்கனு சொல்லலை. ஆனாலும் என்னைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி தான் வென்று வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அ.தி.மு.க ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன்."

``மோடி உங்கள் நண்பர்னு சொல்லுறீங்க. மோடியிடம் நீங்கள் புறக்கணிக்கப்படுவதைச் சொன்னீர்களா?"

``ஒவ்வொரு விஷயத்தையும் புகாராகச் சொல்லாமல்... சிறப்பான விஷயங்களைச் சொல்லும்போது சிறப்பாகச் சொல்வது. ஆலோசனை சொல்லும்போது ஆலோசனை சொல்கிறேன். மோடியின் தொடர்பில்தான் இருக்கிறேன். என்னுடைய தகவல்கள் அவருக்குப் போய்க்கொண்டிருக்கிறது."

``ரஜினி கட்சி ஆரம்பிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``அவர் கட்சி ஆரம்பிக்காதது ஒருவித கோழைத்தனமாகத்தான் பார்க்கிறேன். அவர் கட்சி ஆரம்பிச்சிருக்கணும். அல்லது அவர் கட்சி ஆரம்பிப்பேன்னு சொல்லாமல் இருந்திருக்கணும். அவர் அரசியலுக்கு வருவேன்னு தட்டிய தட்டில் தூசி பறந்ததுதான் மிச்சம். மற்றபடி ஒன்றுமில்லை. ரஜினி ரொம்ப குழம்பிப்போய்விட்டார்."


``கமலின் `மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு எதிர்காலம் எப்படியிருக்கும்?"

``சிறப்பான எதிர்காலம் உண்டு. ஆனால், தமிழகம் மின்மிகை மாநிலமாக டார்ச் லைட்டுக்கு இந்த தேர்தலில் தேவை இருக்காது."

``2000 ரூ நோட்டில் சிப் இருக்கிறதா?"

``கிரிஜா வைத்தியநாதன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?"

``மயில்சாமி சுயேச்சையாக போட்டிப்போடுகிறார்... ஒரு நடிகராக என்ன நினைக்கிறீர்கள்?"

``காவல்துறைக்குப் பயந்துகொண்டு ஆஜராகாமல் இருந்தீர்களே...."

போன்ற பல கேள்விகளுக்கான பதிலை கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்...



source https://www.vikatan.com/government-and-politics/politics/sve-sheker-speaks-about-rift-in-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக