Ad

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

``நீட், அனிதா குறித்த ட்வீட் என் அனுமதியின்றி பதிவிடப்பட்டுள்ளது" - மாஃபா பாண்டியராஜன்

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவை வைத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டிருந்த வீடியோ ட்வீடுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

நீட் அனிதா குறித்த ட்வீட்

மாஃபா பாண்டியராஜன் பதிவிட்ட வீடியோவில் மாணவி அனிதா பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பின்னணியில் ஒலித்த குரலில், ``வருசத்துக்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டின் சரித்திரத்திலேயே கிடையாது. இந்த வாய்ப்பு ஜெயலலிதா அம்மாவோட ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின தி.மு.க-வை மன்னிச்சிடாதீங்க. சூரியன் உதிக்கிறது, என்னை மாதிரி 17 பேருக்கு அஸ்தமனம் ஆகிடுச்சு. உங்கள் கையில் இருக்கிற விரல் மை எங்கள் வாழ்க்கை. மறந்துறாதீங்க. மன்னிச்சிடாதீங்க தி.மு.கவை ” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டிருந்த இந்த வீடியோ அனிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக, அனிதாவின் அண்ணன் மணிரத்னம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படி பல வகையில் கண்டனங்கள் வலு பெற்ற நிலையில் அந்த பதிவை நீக்கினார் மாஃபா பாண்டியராஜன்.

Also Read: அனிதாவை வைத்து அதிமுக-வுக்கு ஆதரவாக நீட் வீடியோ - மாஃபா பாண்டியராஜனுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்த அந்த வீடியோ தனக்கு தெரியாமல் பதிவாகியிருப்பதாக, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். அதில்,`` நீட் குறித்த ட்வீட் ஒன்று எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை அது என்னுடைய அனுமதியின்றி பதிவாகியிருக்கிறது. அதை செய்த நபர்கள் யாரென்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீஸில் வழக்கு பதியப்படும். யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் எனக்கு இல்லை." என்று தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tweet-about-neet-is-posted-without-my-knowledge-mafoi-pandiarajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக