Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

புதிய பங்குகளை வெளியிடுகிறது `லோதா டெவலப்பர்ஸ்'... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

மும்பையைச் சேர்ந்த, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘லோதா டெவலப்பர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, `செபி’யிடம் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தது. அதற்கான அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் 7 முதல் 9-ம் தேதிகளில் புதிய பங்குகளை வெளியிடுகிறது. இந்த வெளியீட்டின் மூலம் 2,500 கோடி ரூபாய் நிதியை, முதலீட்டளர்களிடமிருந்து திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த வெளியீட்டில் 5,14,40,328 கோடி பங்குகள் வெளியிடப்படுகின்றன. பங்கு ஒன்றின் விலை ரூ.483- ரூ.486 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஓரு லாட் சைஸ் 30 பங்குகளைக் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு முதலீட்டாளர்கள் 13 லாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, அதிகபட்சம் 390 பங்குகளை, ரூ.1,89,540 கொடுத்து வாங்கலாம்.

லோதா டெவலப்பர்ஸ்

இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான, ‘லோதா டெவலப்பர்ஸ்’ இப்போது, ‘மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்’ என பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில், இதன் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 21,750 கோடி ரூபாய்.

இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டுவது இது மூன்றாவது முயற்சியாகும். இதற்குமுன், 2009 செப்டம்பரில், 2,800 கோடி ரூபாய் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டுக்கு வர முயற்சித்தது. ஆனால், உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாக அந்த முயற்சி அரங்கேறவில்லை. அதன்பின், 2018-ல் ஒருமுறை முயற்சி எடுத்தது. அப்போது, இந்தியப் பங்குச் சந்தை நிலவரங்கள் சரியில்லாததால், பின்வாங்கிவிட்டது. தற்போது பங்குச் சந்தை சூழல் மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால், மீண்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.கொரோனாவுக்குப்பின் வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதை ஒட்டி இந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறது.

முதலீடு

இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியில் 1,500 கோடி ரூபாயைக் கடன் அடைப்பதற்கும். 375 கோடி ரூபாயை நிலம் வாங்குவதற்கும், இதர தொகையை மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.



source https://www.vikatan.com/business/finance/lodha-developers-to-begin-their-ipo-on-april-7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக