Ad

சனி, 24 ஏப்ரல், 2021

ஜன்ம ஜன்மமாய் தொடரும் நேர்த்திக்கடன் செலுத்தாத பாவம் தீர்க்கும் எளிய 5 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

25. 4. 21 சித்திரை 12 ஞாயிற்றுக்கிழமை

திதி: திரயோதசி பகல் 2.25 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: அஸ்தம்

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை

சந்திராஷ்டமம்: சதயம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: சரபேஸ்வரர்

சரபேஸ்வரர்

‘ஏழை வேண்டுதல் எழுபது ஆண்டுகள் பொறுக்கும்' என்று ஒரு பழமொழி நம்மிடையே உண்டு. அதாவது இறைவனிடம் ஒரு காரியத்துக்காக வேண்டிக்கொண்டு, அதை நிறைவேறிய பிறகும், அதை இதோ அதோ என்று தள்ளிக்கொண்டே இருப்போம். மனிதரிடம் வாங்கிய கடனுக்கு அஞ்சும் நாம், இறைவனிடம் உண்மையாக இறை அச்சத்தோடு இருப்பதில்லை. உண்மையில் இறைவனிடம் பேரம் பேசுவது கூட மடமைதான். இருந்தாலும் உள்ளார்ந்த அன்பில் ஒரு நேர்த்திக்கடனை வேண்டிக்கொண்டால் அதை உடனடியாக செலுத்திவிட வேண்டும். சத்தியம் தவறாத அன்பனை ஆண்டவனும் விரும்புவான். உண்மையில் உங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை என்றாலும் உங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவிடுங்கள். அதுவே நல்லது, இதனால் நெகிழ்ந்து போகும் இறைவன் உங்களை இன்னும் வேகமாக முன்னேற்றுவான். நீங்கள் உண்மையாக இருக்க இருக்க உங்களுக்கு எப்போதும் காவலாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இறைவனுக்கு ஏற்பட்டுவிடும்.

எந்த கஷ்டம் வந்தாலும், ஐயோ நேர்த்திக்கடன் செலுத்ததால்தான் இந்த வேதனையோ என்ற குற்ற உணர்வும் உங்களுக்கு உண்டாகாது. இறைவனிடம் சொன்ன சொல்லை மீறுவதை விட பாவம் வேறேதும் உண்டா, சிவனிடமே துணிந்தவன் வேறு எதற்கு தான் துணிய மாட்டான் சொல்லுங்கள். முன்னோர்கள் செய்யாமல் விட்ட நேர்த்திக்கடன்களை உங்களை பெரிதும் வாட்டும், உங்கள் வாரிசுகளுக்குப் பல தொல்லைகள் நேரும். எனவே விரைவாக அதற்கான பரிகாரங்கள் செய்யலாம். அதற்கென சில பரிகாரங்கள் உண்டு. அவை குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலனை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

சுறுசுறுப்பு : காலைமுதல் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி மகிழ்ச்சி நீடிக்கும். - என்ஜாய் தி டே!

ரிஷபம் :

பதற்றம் : சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து நீங்கும். தேவையில்லாமல் பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். - பதறாத காரியம் சிதறாது!

மிதுனம்

பொறுமை : மனதில் தேவையற்ற சஞ்சலம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிருங்கள். இறைவழிபாட்டில் மனதைச் செலுத்த வேண்டிய நாள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

கடகம்

மகிழ்ச்சி : பிற்பகலுக்கு மேல் அனைத்தும் சாதகமாகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மைகள் நடைபெறும் நாள். - நாள் நல்ல நாள்!

சிம்மம்

வெற்றி : எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்ன வருத்தங்களும் நீங்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே கிடைக்கும். - வெற்றிக்கொடிகட்டு!

கன்னி

நற்செய்தி : எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். சில விஷயங்கள் தாமதமானாலும் நல்லபடியாக முடிந்துவிடும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். - இனி எல்லாம் சுபமே!

துலாம்:

செலவு : எதிர்பாராத செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். ஆனாலும் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். - செலவே சமாளி

விருச்சிகம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும். புதிய முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். - நம்பிக்கை அதானே எல்லாம்!

தனுசு:

உற்சாகம் : நாள் முழுவதும் உற்சாகம் நிறைந்திருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களும் தேவையான உதவிகளைச் செய்வார்கள். - ஆல் தி பெஸ்ட்!

மகரம்

விவாதம் : அனைத்தும் அனுகூலமாக இருக்கும் நாள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். ஆனாலும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - ஆல் இஸ் வெல்

கும்பம்

கவனம் : நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்றாலும் செயல்களில் கவனம் தேவை. சொற்களிலில் மிகுந்த நிதானம் அவசியம். இறைவழிபாடு தேவை. - எல்லாம் அவன் செயல்!

மீனம்

அனுகூலம் : முயற்சிகள் அனைத்தும் அனுகூலமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவும் பொருள்சேர்க்கையும் உண்டாகும் நல்ல நாள். - ஜாலி டே!



source https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedies-for-not-performing-offerings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக