Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

அமைச்சர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்குக் கிடையாது! - அமைச்சர் ஜெயக்குமார் #NowAtVikatan

அமைச்சர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்குக் கிடையாது!

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்படுத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுகிறார்களா என்று கேள்வி எழுப்பியிருந்த ஹெச்.ராஜா, பா.ஜ.க-வை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

செல்லூர் ராஜு - ஜெயக்குமார்

இந்த கருத்துக்குப் பதில் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், `அமைச்சர்களுக்குக் கட்டளையிடும் அதிகாரம் ஹெச்.ராஜாவுக்குக் கிடையாது; அவர்களைப் பேச வேண்டாம் என்று சொல்ல ஹெச்.ராஜா யார்?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Also Read: `செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல; இனி பேச வேண்டாம்!’ - ஹெச்.ராஜா

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,23,179-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 86,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68,472-ஆக அதிகரித்திருக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 31.07 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

Also Read: கொரோனா: `பரவலான தடுப்பூசி விநியோகத்தை அடுத்த ஆண்டு பாதி வரை எதிர்பார்க்க முடியாது!' - WHO



source https://www.vikatan.com/news/general-news/05-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக