Ad

புதன், 2 செப்டம்பர், 2020

இ.எம்.ஐ காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா? இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை #NowAtVikatan

இ.எம்.ஐ காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா?

உச்ச நீதிமன்றம்

வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் வங்கிகளின் முடிவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணையைத் தொடர்கிறது. இந்த வழக்கில், இ.எம்.ஐ காலஅவகாசத்தை 2 ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Also Read: இ.எம்.ஐ செலுத்துவதில் சிக்கலா? - இதோ சில யோசனைகள்!

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,53,406-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,043 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67,376-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 68,584 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிய நிலையில்,குணமடைந்தோர் எண்ணிக்கை 29.01 லட்சத்திலிருந்து 29.70 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

Also Read: சென்னை: 21.5 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு திறன்... செரோ ஸ்டடி முடிவுகள்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஸ்டாலின்

பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

Also Read: `தம்பியின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன்!' - வேட்புமனுவைத் தயார் செய்த துரைமுருகன்



source https://www.vikatan.com/news/general-news/03-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக