Ad

புதன், 2 செப்டம்பர், 2020

இந்தியாவில் அதிக தற்கொலை... இரண்டாம் இடத்தில் தமிழகம்! - NCRB அறிக்கை சொல்வதென்ன?

அண்மையில் தேசிய குற்றப் பதிவுகள் முகமை வெளியிட்ட தகவலின் படி, 2019-ம் ஆண்டு 1,39,123 தற்கொலைகள் நடந்துள்ளது. 2018-ம் ஆண்டு பதிவான தற்கொலைகள் எண்ணிக்கை 1,34,516. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் 0.02 விழுக்காடு அதிக தற்கொலைகள் நடந்துள்ளது.

2019-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான தற்கொலைகள் எண்ணிக்கை 13,493 - NCRB

அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலத்தில், 13.6 விழுக்காடுகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 9.7 விழுக்காடுகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும், 9.1 விழுக்காடுகளுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டில் பதிவான தற்கொலைகள் 11.1 விழுக்காடு. 2018-ம் ஆண்டில் பதிவானது 10.3 விழுக்காடு. அதுவே 2019-ம் ஆண்டை பொறுத்தவரை 9.7 விழுக்காடு என்றாளவில் பதிவாகும் தற்கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

NCRP report

2019-ம் ஆண்டை பொறுத்தவரைத் தற்கொலை செய்துகொண்டவர்கள் 23.4 விழுக்காடு நபர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். அடுத்ததாக 15.4 விழுக்காடு நபர்கள் குடும்பத் தலைவிகள். விவசாயத் துறையைச் சேர்ந்த 7.4 விழுக்காடு நபர்கள் தற்கொலை செய்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்களில் 74,629 நபர்கள், அதாவது 53.6% நபர்கள் தூக்கிட்டு தற்கொலைகள் செய்துள்ளனர். விஷமருந்தி 35,882 (25.8%) நபர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

NCRP report

பெருநகரங்களின்அடிப்படையில் சென்னையில் 2,461 நபர்களும், கோவையில் 338 நபர்களும், மதுரையில் 345 நபர்களும், திருச்சியில் 188 நபர்களும் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவல்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/ncrp-report-tamil-nadu-has-the-second-highest-suicide-rate-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக