Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

`தி.மு.கவில் ஸ்டாலின்; அ.தி.மு.கவில் யார் முதல்வர் வேட்பாளர்னு சொல்லமுடியுமா?' - செந்தில் பாலாஜி

``கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், குறைந்தப்பட்சம் தலா 50,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறும். அ.தி.மு.கவினர் அப்படி சவால்விட தயாரா?" என்று தி.மு.க அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், 'எல்லோரும் நம்முடன்..தி.மு.கவில் இணையுங்கள்' என்ற பெயரில், உறுப்பினர் சேகர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

Also Read: 500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

இந்நிகழ்ச்சியில், தி.மு.கவின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ முன்னிலையில், பலர் இணைய வழியே தி.மு.க உறுப்புனராக தங்களை இணைத்து கொண்டனர். செந்தில் பாலாஜி அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

தி.மு.க நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது,``கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 10 ஆயிரம் பேர் வீதம் 40 ஆயிரம் பேரை, தி.மு.க-வில் உறுப்பினராக்கத் திட்டமிட்டுள்ளோம். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தலா 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறும். அப்படி, அ.தி.மு.க-வினர் சவால்விடத் தயாராக உள்ளனரா? ஆனால், ஏற்கெனவே அரவக்குறிச்சி தேர்தலில் இப்படி சவால்விட்டு என்னிடம் அ.தி.மு.க-வினர் மண்ணைக் கவ்வியதால், அப்படி சவால்விட திராணியிருக்காது.

அதேபோல், தி.மு.க-வில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர். அப்படி வெளிப்படையாக அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் யார் என கூற முடியுமா?. அ.தி.மு.க-வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆனால், திமுக-வில் தளபதி மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பது உறுதி செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தி.மு.க நிகழ்ச்சி

வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தி.மு.க 234 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார். இது நிச்சயம்" என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-senthil-balaji-slams-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக