புகழி மலை கந்தன்
இடம்: வேலாயுதம்பாளையம், கரூரிலிருந்து சுமார் 16 கி.மீ.
சிறப்பு: 2000 ஆண்டுப் பழைமை. பாண்டிய மன்னர்கள் குறித்த கல்வெட்டுகள்
புகழி மலை கந்தன்
பிரார்த்தனை: வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் உள்ளது. 12 செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்குச் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், எண்ணியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
குமரகிரி
சுவாமி: ஸ்ரீபாலதண்டாயுதபாணி
இடம்: சேலம் அம்மாபேட்டையிலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
குமரகிரி
பிரார்த்தனை: மாம்பழம் சமர்ப்பித்து வேண்டினால் வேண்டுதல்கள் நிறைவேறுமாம். குறிப்பாக வழக்கில் வெற்றி, வியாபார விருத்தி, அமோக விளைச்சல் போன்றவை கைக்கூடுமாம்.
ஞானமலை
இடம்: காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலை உள்ளது.
சுவாமி: முருகப்பெருமான், குறமகள் தழுவிய குமரன்
ஞானமலை
பிரார்த்தனை: இங்குள்ள `குறமகள் தழுவிய குமரன்' திருக்கோலத்தைத் தரிசித்தால் தம்பதிகளுக்கிடையே உள்ள உறவுச் சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும் என்கிறார்கள்.
பாலமதி
இடம்: வேலூரிலிருந்து 14 கி.மீ.
சுவாமி: குழந்தை வேலாயுத ஸ்வாமி
பாலமதி
சிறப்பு: பாலமதி என்றால் சந்திரன் குழந்தையாக வழிபட்ட தலம்.
பிரார்த்தனை: இந்த முருகப்பெருமானை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தோரணமலை
சுவாமி: அருள்மிகு முருகப்பெருமான்
இடம்: திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகில்...
தோரணமலை
பிரார்த்தனை: அகத்தியர், தேரையர் உள்ளிட்ட சித்தர்கள் தங்கியிருந்து பல அற்புத மூலிகைகளைக் கண்டறிந்த மலையிது. இங்கு வந்து வேண்டினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
ஈசன் மலை
இடம்: வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டம், தெங்கால் கிராமம்
சுவாமி: முருகப்பெருமான்
ஈசன் மலை
பிரார்த்தனை: இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு செல்வவளம் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் தொலைந்து போன சொத்துக்களும் சொந்தங்களும் விரைவில் கிட்டும்.
source https://www.vikatan.com/ampstories/spiritual/gods/thaipusam-2021-6-hill-temples-of-lord-murugan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக