Ad

வியாழன், 24 செப்டம்பர், 2020

பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ! - புகைமண்டலமான திருமுடிவாக்கம் சிப்காட்

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சிப்காட்டில், குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் குடோன் இருக்கிறது. பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் திறந்தவெளி குடோனாக அதை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

தீ விபத்து

இந்நிலையில், இன்று இந்த பழைய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென்று பரவிய தீயில், குடோன் முழுவதும் பற்றியெரிய ஆரம்பித்தது.

Also Read: Lebanon: வான் நோக்கிப் பரவிய கரும்புகை... பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீ விபத்து!

தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பூந்தமல்லி மற்றும் தாம்பரம் பகுதிகளிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சிக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் முன்னரே குடோனில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகின. தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் போலக் காட்சியளிக்கிறது.

தீ விபத்து

குடோனில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்து தொடர்பாகக் குன்றத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.



source https://www.vikatan.com/news/accident/fire-accident-in-old-plastic-godown-at-thirumudivakkam-sipcot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக