ஆன்லைம் கேம் மோகத்தில் சிக்கிய 7-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் கொடுக்கப்பட்ட செல்போன் மூலம், அவனது பெற்றோர் 90,000 ரூபாயை இழந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அந்த சிறுவன் பொழுதுபோக்கிற்காக செல்போனில் வழியாக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட அச்சிறுவனுக்கு 'ப்ரீ பயர்’ என்ற விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கேம் அப்டேட் கேட்கும் சமயங்களில் அச்சிறுவன் தனது தாயின் ஏ.டி.எம் கார்டு, யுபிஐ நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளான். இதன் மூலம் வங்கியில் இருந்து வந்த ஒ.டி.பி எண்களைப் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளான். இதனால், சிறுவனின் தாயின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் இருந்து 90,000 ரூபாய் பறிபோயுள்ளது. மேலும் வங்கியில் இருந்து வந்த ஒ.டி.பி தகவல்களையும் அழித்துள்ளான் அந்த சிறுவன்.
Also Read: காசு... பணம்... துட்டு... மணி... மணி... ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்! - தப்பிக்கும் வழிகள்!
இந்நிலையில் தனது மனைவியின் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார் செந்தில்குமார். அங்கு பணம் எடுக்க முயன்ற செந்தில்குமாருக்கு வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் வரவே அதிர்ச்சிக்குள்ளானர்.
இதன் பின் வீட்டிற்கு வந்த அவர் தனது மகன் மற்றும் மனைவியிடம் வங்கியில் பணம் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார். அப்போது, தான் ஆன்லைன் கேம் விளையாடியதையும், அதனால் பணம் பறிபோனதையும் தனது தந்தையிடம் கூறியுள்ளான் சிறுவன். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பணத்தை பறிகொடுத்ததற்கு தண்டனையாக ஒன்று முதல் 90,000 வரை நோட்டில் எழுதுமாறு கூறியுள்ளனர். இந்த நூதன தண்டனையின் படி 3,000-த்துக்கு மேல் அச்சிறுவனால் எழுத முடியவில்லை. இதையடுத்து அச்சிறுவனுக்கு புத்திமதி கூறிய பெற்றோர், இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/ramnad-school-student-lost-90000-in-online-game
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக