Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கொரோனா: இந்தியாவில் 7 கோடி மாதிரிகள் பரிசோதனை; 59 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு! #CoronaUpdates #NowAtVikatan

மறைந்த பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள்!

இடம்: தாமரைபாக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இடம்: தாமரை பாக்கம் #RIPSPB #SPBalasubramaniam

Posted by Vikatan EMagazine on Friday, September 25, 2020

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 59,03,933 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,089 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 93,379 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 48,49,585 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசி

நேற்று ஒரே நாளில் 13,41,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நேற்று வரையில் இந்தியாவில் 7,02,69,975 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/26-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக