Ad

புதன், 2 செப்டம்பர், 2020

தனிப்பட்ட விரோதம்? - ராமநாதபுரத்தில் கொலை; லால்குடி நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர்

ராமநாதபுரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நால்வர், திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கொலை செய்யப்பட்ட அருண் பிரகாஷ்

ராமநாதபுரம் தாயுமானவர் கோயில் தெருவில் வசித்து வரும் சுவாமிநாதன் என்பவரின் மகன் அருண்பிரகாஷ் (24). இவரது நண்பர் வசந்த நகரை சேர்ந்த யோகேஷ்வரன். இவர்கள் இருவரும் வசந்த நகர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 5 டூவீலர்களில் அங்கு வந்த 12 பேர் இருவரையும் கத்தியால் சரமரியாகக் குத்திவிட்டு தப்பினர். இதில், அருண்பிரகாஷ் உயிரிழந்த நிலையில் யோகேஷ்வரன் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: காரைக்குடி: சொத்து பிரச்னையில் சித்தப்பா கொலை! - தலையுடன் போலீஸில் சரணடைந்த சகோதரர்கள்

இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸார் சின்னக்கடை சேக் அப்துல் ரஹ்மான், பாம்பூரணி இம்ரான்கான், வைகை நகர் சரவணன், நாகநாதபுரம் வெற்றி, சதாம், ஹக்கீம், ராசிக், அசார், அஜீஸ், அஜ்மல், சபீக் ரஹ்மான், ஹைதர் அலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களைத் தேடி வந்தனர். இதனிடையே, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி அருண் பிரகாஷின் உறவினர்கள், பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகளை விரைவாக கைது செய்வோம் என போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ராமநாதபுரத்தில் மறியல்

இதனிடையே அருண் பிரகாஷ் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டார். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 பேரை தவிர முகம்மது ரியாஸ், காமாட்சி, சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய நால்வரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டும் வந்தனர். அருண் பிரகாஷ் கொலை சம்பவம் தனிப்பட்ட முன்விரோதத்தினால் நிகழ்ந்தது எனவும், மத பிரச்சனை காரணம் அல்ல எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்கள்

இந்நிலையில் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த லெப்ட் சேக் என்ற சேக் அப்துல் ரஹ்மான் மற்றும் சதாம், அஜீஸ், ரஹ்மான் ஆகிய நான்கு பேரும் நேற்று திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



source https://www.vikatan.com/news/crime/four-surrendered-before-court-over-ramnad-youth-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக