Ad

புதன், 23 செப்டம்பர், 2020

`ஒரே நாளில் 11,56,569 மாதிரிகள் பரிசோதனை; 86,508 பேருக்கு பாதிப்பு!' - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,508 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 57,32,519 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,129 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 91,149 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 46,74,988 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா

இந்தியாவில் தற்போது வரை 6,74,36,031மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 11,56,569 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.



source https://www.vikatan.com/news/general-news/24-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக