Ad

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மாஃபா பாண்டியராஜன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

பாஜகவிலிருந்து தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய மாஃபா பாண்டியராஜன், பின்னர் தேமுதிகவில் இணைந்து, 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர், 2016 ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்து, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் பாண்டியராஜன் 1,08,064  வாக்குகள் பெற்றார். அவரைஎதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர்,1,06,669 வாக்குகள் பெற்ற நிலையில், வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியராஜன் வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் தான் சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இந்த தொகுதியை அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறையும் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட பாண்டியராஜனை எதிர்த்து, மீண்டும் திமுக சார்பில் நாசர் களம் இறக்கப்பட்டிருந்ததால், போட்டி கடுமையாகவே காணப்பட்டது. தோற்கடிக்கப்பட வேண்டிய அமைச்சர்கள் என்ற திமுகவின் பட்டியலில், பாண்டியராஜனும் இடம்பெற்றிருந்ததால் இந்தத் தேர்தலில் உடன் பிறப்புகளின் களப்பணி கடுமையாகக்  காணப்பட்டது.

மாஃபா பாண்டியராஜன்

இங்கு வன்னியர், முதலியார், நாயுடு, ஆதிதிராவிடர் மற்றும் பல சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அத்துடன் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க கூட்டணி, பாண்டியராஜன் மீதான பாஜக ஆதரவு முத்திரை போன்றவை, அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் வாக்குகளைச் சிதறடித்துவிடலாம் என்ற அச்சமும், அமமுக பிரிக்கும் வாக்குகளும் மாஃபா-வுக்கு மைனஸாக பார்க்கப்பட்டது. அ.தி.மு.க-வில் நிலவிய கோஷ்டி பூசலும் அக்கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களாக பார்க்கப்பட்டன.

போதிய சாலை வசதிகள் இல்லாதது, கொரோனா காலகட்டத்தில் மக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பாண்டியராஜனுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mafoi-pandiarajan-a-short-analysis-on-tn-elections-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக