2021 ஐபிஎல் சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணியை நீண்ட அனுபவம் உடைய கேப்டன் தோனி வழிநடத்த, டெல்லி அணியை முதல் முறையாக கேப்டன் ஆகியிருக்கும் இளம் வீரர் ரிஷப் பன்ட் வழிநடத்தவிருக்கிறார். மாஸ்டர் Vs மாண்புமிகு மாணவன் என அமையப்போகும் இந்தப்போட்டியில் வெல்லப்போவது யார், இரு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?
சென்னை அணியை பொறுத்தவரைக்கும் கடந்த சீசனில் முதல் முறையாக ப்ளே ஆஃபுக்கு தகுதிபெறாமல் வெளியேறியிருந்தது. அணிக்குள் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தது. 'Too many holes in the ship' எனக்கூறி தோனியே ஒன்றும் செய்யமுடியாமல் விழிபிதுங்கி நின்றது சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த முறை சிஎஸ்கே தோற்றதற்கு போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்து நடைபெற்றதும் மிக முக்கிய காரணம். இந்த முறை சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் சென்னைக்கு போட்டிகள் இல்லாவிட்டாலும், சென்னை அணியினர் ஆடி பழக்கப்பட்ட வான்கடே, சின்னசாமி ஸ்டேடியம் போன்றவற்றில் வைத்து போட்டிகள் நடைபெறுவது சென்னை அணிக்கு சாதகமே.
கடந்த சீசனில் ரெய்னா இல்லை என்கிற செய்தியிலிருந்தே சென்னை அணியின் தடுமாற்றங்கள் தொடங்கியது. ரெய்னா இல்லாததால் டாப் ஆர்டரில் சென்னைக்கு ஒரு மொமன்ட்டமே கிடைக்கவில்லை. ஆனால், இந்த சீசனில் ரெய்னா ஆடப்போகிறார். இதுவே சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கப்போகிறது.
டெல்லி அணியைப் பொறுத்தவரை கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இளம் அணியாக மிகச்சிறப்பாக ஆடியிருந்தது. ஆனால், இந்த முறை அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் இல்லாதது பெரிய பின்னடைவே. தனது பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்படாமல் கேப்டன்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார் ரிஷப் பன்ட்.
சென்னை vs டெல்லி இந்த ரைவல்ரியில் சென்னை அணியே பெரும்பாலான போட்டிகளில் வென்றிருக்கிறது. ஆனால், கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலுமே டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது சென்னை அணி. இந்த முறை அந்த தோல்விகளுக்கும் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கும் முனைப்புடனையே சென்னை அணி இருக்கிறது. அதேநேரத்தில், டீம் மீட்டிங்கில் ரிக்கி பான்ட்டிங் பேசியதையும் பார்த்தியிருப்போம். "இங்கே நாம் ஜெயிப்பதற்கு மட்டுமே வந்திருக்கிறோம். முதல் போட்டியிலேயே சென்னை அணியை காலி செய்கிறோம்'' என சூளுரைத்திருக்கிறார். ஆக, இந்த முதல் போட்டி வெறித்தனமாகத்தான் இருக்கப்போகிறது.
சென்னை vs டெல்லி இந்த ரைவல்ரியில் சென்னை அணியே பெரும்பாலான போட்டிகளில் வென்றிருக்கிறது. ஆனால், கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலுமே டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியிருக்கிறது சென்னை அணி. இந்த முறை அந்த தோல்விகளுக்கும் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கும் முனைப்புடனையே சென்னை அணி இருக்கிறது. அதேநேரத்தில், டீம் மீட்டிங்கில் ரிக்கி பான்ட்டிங் பேசியதையும் பார்த்தியிருப்போம். "இங்கே நாம் ஜெயிப்பதற்கு மட்டுமே வந்திருக்கிறோம். முதல் போட்டியிலேயே சென்னை அணியை காலி செய்கிறோம்'' என சூளுரைத்திருக்கிறார். ஆக, இந்த முதல் போட்டி வெறித்தனமாகத்தான் இருக்கப்போகிறது.
சென்னை அணிக்கு ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்கப்போவதில்லை. கடந்த சீசனில் கடைசி மூன்று போட்டிகளில் இறங்கி கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாடும், டுப்ளெஸ்சியும் ஓப்பனிங் இறங்குவார்கள். அடுத்து ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரண், மொயின் அலி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் என 10 இடங்கள் தெளிவாக இருக்கிறது. மீதமிருக்கும் ஒரு வெளிநாட்டு வீரருக்கான ஸ்லாட்டில் யார் இறங்கப்போகிறார்கள் என்பது மட்டும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஹேசல்வுட்டுக்கு ரீப்ளேஸ்மெண்டாகியிருக்கும் பெஹ்ரண்டாஃப் இன்னும் சென்னை அணியுடன் இணையவே இல்லை. லுங்கி இங்கிடி இன்னும் குவாரன்டைனை முடிக்கவில்லை. பிராவோ, இம்ரான் தாஹிர் இவர்களில் ஒருவரைத்தான் தோனி எடுக்கப்போகிறார். ஜடேஜா, மொயின் அலியுடன் கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னரும் வேண்டும் என நினைத்தால் இம்ரான் தாஹிர் டிக் அடிக்கப்படுவார். பிராவோவை எடுக்கும்பட்சத்தில் பேட்டிங் ஆர்டர் இன்னும் நீளும் என்று கூட யோசிக்கலாம். முடிவு தோனியின் கையிலேயே இருக்கிறது.
டெல்லி அணிக்கு அவர்களின் பெஸ்ட் ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் பல தடைகள் இருக்கிறது. முக்கியமாக, கடந்த சீசனில் 52 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வேகப்புயல்கள் ரபாடா, நோர்க்கியா கூட்டணி இன்னும் குவாரன்டைனை முடிக்கவில்லை. இதுவே டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் இருவரையும்தான் இந்த போட்டியில் டெல்லி அணி நம்பியிருக்கப்போகிறது. டாப் ஆர்டரில் ஷ்ரேயாஸ் இல்லாததால், கடந்த சீசனில் முக்கால்வாசி போட்டிகளில் பென்ச்சிலேயே இருந்த ரஹானேவுக்கு நம்பர் 3-ல் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஃபார்மில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், வோக்ஸ், டாம் கரண் ஆகியோர் 4 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டில் ஆடலாம். டாம் கரணுக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித்தை கொண்டு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிரடி சூறாவளியாக இருக்கும் டெல்லியின் மிடில் ஆர்டரில் ஸ்மித் எப்படி செட் ஆவார் என்று தெரியவில்லை.
அக்ஸர் பட்டேல் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை என்பதால், அஷ்வின், அமித் மிஸ்ரா இருவருமே ஸ்பின் டிபார்ட்மென்ட்டை பார்த்துக்கொள்ளப் போகிறார்கள்.
ப்ளேயிங் லெவனில் தெளிவு, தோனியின் அனுபவம் போன்றவை சென்னை அணிக்கு சாதகமாக இருக்கலாம். சென்னை அணியை விட வெற்றிபெற வேண்டும் என்கிற தாகமும் வேட்கையும் டெல்லி அணிக்கு அதிகமாக இருக்கிறது. இது அவர்களுக்கான ஒரு பாசிட்டிவ் விஷயமாக இருக்கும்.
#தோனி Vs பன்ட் என்கிற இந்த போட்டி ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது. ''என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் தோனியிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து சென்னைக்கு எதிராக புதிதாக சில விஷயங்களை முயற்சிப்பேன்'' என ரிஷப் பன்ட் கூறியிருக்கிறார். ஒரு மாஸ்டரும் அவருடைய மாணவனுமே எதிரெதிர் திசையில் நின்று மோதப்போகும் பரபர சண்டைக்காட்சியை போலத்தான் இந்தப்போட்டி இருக்கப்போகிறது.
மாஸ்டர் Vs மாண்புமிகு மாணவன் வெல்லப்போவது யார்?!
source https://sports.vikatan.com/ipl/chennai-super-kings-vs-delhi-capitalsipl-2021-preview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக