`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்தச் சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக்கொள்வதற்கும், ஆண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.
இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில் குடும்ப வன்முறைகள் பற்றியும், உருவகேலி, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன், ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்வதில்லை, பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது ஆகியவை குறித்து பேசியிருந்தோம். இந்த இதழில் `இந்த இதழில், தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்?' என்பது பற்றி பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.
அந்த வகையில் சின்னத்திரை பிரபலம் ரியோ தன்னுடைய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
``நம்மளைப் பத்தி எல்லாமே தெரிஞ்ச தோழி மனைவியா அமைஞ்சா அதைவிட வாழ்க்கையில பெரிய கிஃப்ட் இருக்க முடியாதுங்க. நம்ம நிறை, குறை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு நம்மோட வாழறதுக்கு ரெடியா இருக்கிறவங்க, அதுக்கப்புறம் வாழ்க்கையில என்ன நடந்தாலும், எவ்ளோ பெரிய பிரச்னைகள் வந்தாலும் நம்மளை விட்டுட்டுப் போக மாட்டாங்க... ஆண்கள் எல்லாரும் சின்னச் சின்ன தவறுகள் செய்யுறவங்கதான். தோழியா இருந்து மனைவியான பொண்ணுக்கு அதெல்லாம் ஏற்கெனவே தெரியும்கிறதால, அதை நாம செய்ய மாட்டோம். அப்படியே மீறி செய்ய நினைச்சாலும் அவங்க விடமாட்டாங்க.
தோழி காதலியா மாறுகிற டிரான்ஸ்ஃபர்மேஷன்ல, அவங்களைப்பத்தி நினைச்சாலே ஹேப்பியா இருக்கும். அவங்களைப்பத்தி யார் என்ன சொன்னாலும் `அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும்’ங்கிற நம்பிக்கை மனசுக்குள்ள வரும் பாருங்க... சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு அது போதும்ங்க.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...
என் காதலை எடுத்துக்கிட்டீங்கன்னா, தோழிதான் காதலியாகி மனைவியுமாகியிருக்காங்க. ஒரு காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல ரெண்டு பேரும் மீட் பண்ணோம். பேசினோம். ஃபிரெண்ட்ஸானோம். அதுக்கப்புறம் என் ஆபீஸ்ல இன்டர்ன்ஷிப் செய்யுறதுக்காக வந்தாங்க. அதுக்கப்புறம் ஒண்ணாவே ஆபீஸ்க்கு போறது, வர்றது, சாப்பிடுறது, ஆபீஸ்லேயும் ஒண்ணாவே இருக்கிறதுன்னு குளோஸ் ஃபிரெண்ட்ஸாகிட்டோம். அதுக்கப்புறம் என் குடும்பத்தோட அவங்க பழகுறது, அவங்க குடும்பத்தோட நான் பழகுறதுன்னு நட்பு இன்னும் இறுக ஆரம்பிச்சது.
அவங்களுக்கு என்னைப் பார்த்தவுடனே லவ் வந்திருக்கு. நான் அவங்களை ஆரம்பத்துல ஃபிரெண்டாதான் பார்த்தேன். ஆனா, ஏதோ ஒரு புள்ளியில இந்தப் பொண்ணு நமக்கு மனைவியா அமைஞ்சா நல்லாருக்குமேன்னு ஆண்களுக்குத் தோணுமில்லையா... அப்படி எனக்கும் அவங்ககிட்ட தோண ஆரம்பிச்சது. ஆனா, நான் ரொம்ப சாதாரண குடும்பத்துல பொறந்து வளர்ந்தவன். அதனால, மனசுக்குள்ள அவங்க மேல லவ் வந்த பிறகும், `இப்போ லவ்வை சொல்ற இடத்துல நாம இல்ல. சொல்ல வேணாம்’கிற மனநிலையில இருந்தேன். அதனால, அவங்களே காதலைச் சொன்னதுக்கப்புறமும், கல்யாணம், குடும்பம்னு பொறுப்புகளை ஏத்துக்க பயமா இருந்ததால சம்மதம் சொல்றதுக்கு நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்.
Also Read: ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 9 - பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?
ஒரு கட்டத்துல `உனக்கும் அவங்க மேல லவ் இருக்கு. இவங்களைவிட நல்ல பெண் உனக்கு வாழ்க்கையில கிடைக்க மாட்டாங்க’ன்னு மனசு சொல்லுச்சு. அப்புறம்தான் என் காதலைச் சொன்னேன். எங்க நட்புல, எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு காதல் இருந்ததால இதோ இப்போ எங்க திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு. நல்ல தோழி மனைவியாகிட்டா நம்ம வாழ்க்கைபூரா அவங்க நமக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பாங்க. அது ஒரு வரம். அந்த வரம் கிடைச்சவங்க மிஸ் பண்ணிடாதீங்க.’’
ஓர் ஆண், தன் தோழி மீது எப்போது காதலாகிறான் என்பதற்கான நிபுணர் கருத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
source https://www.vikatan.com/lifestyle/relationship/rio-raj-speaks-about-his-love-and-friend-relationship-with-shruti
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக