ஆஸ்திரேலிய ஊடகமான ‘தி ஆஸ்திரேலியன்’, மோடி இந்தியாவை ஒரு வைரஸ் பேரழிவுக்கு இட்டுச் சென்றுவிட்டார் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தது.
அந்தக் கட்டுரையில் கொரோனா விஷயத்தை மோடி அரசு முறையாகக் கையாளவில்லை என்று சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தது. இந்த கட்டுரை முதலில் `தி டைம்ஸ்' இணையத்தில்தான் வெளியாகி இருந்தது.
அந்த ஊடகத்தின் ஆசிய செய்தியாளர் பிளிப்ஸ் செர்வெல்லால் எழுதப்பட்ட இந்த கட்டுரை இவ்வாறாகத் தொடங்குகிறது, “நான் இவ்வாறான கூட்டத்தைப் பார்த்ததில்லை” என மேற்கு வங்க தேர்தலில் தனக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் நரேந்திர மோடி.
இந்தக் கட்டுரையைத்தான் மறு ஆக்கம் செய்திருந்தது `தி ஆஸ்திரேலியன்' ஊடகம்.
இந்த கட்டுரையின் இணைப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்த நிலையை உருவாக்கி உள்ளது” எனக் குறிப்பிட்டு இருந்தது.
இந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.
``அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு கீழ்மைபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக" அந்த மறுப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
``கொரோனாவை கட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அதுமட்டுமல்ல, உலகநாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்துள்ளது" என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/india-reply-to-australia-media-about-covid-management
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக