Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

பூர்வீக சொத்தினை அடைவதில் சிக்கலா... இதோ 6 பரிகாரங்கள்!

தினம் தினம் திருநாளே!

26. 4. 21 சித்திரை 13 திங்கள்கிழமை

திதி: சதுர்த்தசி பகல் 12.17 வரை பிறகு பௌர்ணமி

நட்சத்திரம்: சித்திரை இரவு 11.10 வரை பிறகு சுவாதி

யோகம்: சித்தயோகம் இரவு 11.10 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

பஞ்சாங்கம் - அதிகாலை சுபவேளை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி இரவு 11.50 வரை பிறகு உத்திரட்டாதி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

பூர்விக சொத்துச் சிக்கல்கள் அகல...

பூர்வீக சொத்துகள் சிலருக்குக் கிடைக்காது. என்னென்னவோ செய்தும் இறுதியில் ஏமாற்றம் அடைவார்கள். கிரக கோளாறுகளால் நீதிமன்றம் செல்லும் நிலையும் ஏற்படும். ஏதேதோ காரணங்களால் ஏமாற்றப்படுவார்கள். நண்பர் ஒருவர் 12 ஆண்டுகள் வெளிநாட்டில் உழைத்துத் தாய் தந்தையருக்குப் பணம் அனுப்பி, அவர்களும் அவர்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கி வைக்க, அவரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட, இறுதியில் அவரது சகோதர சகோதரிகள் சொத்தில் பங்கு கேட்ட துயர நிலை உருவானது. அவர்கள் யாரும் வசதியில்லாதவர் அல்லர்.

ராசிபலன்

சிலருக்கு தந்தையின் சொத்துக்கள் கிடைத்தும் பலன் இல்லாமல் போகும். அல்லது வீணாக விற்று விரயம் செய்ய வேண்டிய காலம் வரும். இல்லையென்றால் சொத்து வரவேண்டிய நேரத்துக்கு கிடைக்காது. இது போன்ற சொத்து பிரச்சினைகளுக்கு சனியும், சூரியனும் அமர்ந்திருக்கும் இடங்களே காரணம் என்கின்றன ஜோதிட நூல்கள். மேலும் பலருக்கும் அடிதடி, சண்டை, வம்பு, வழக்குகள் என்று அவமானங்கள் பல அடைந்தே சொத்துக்கள் கிடைக்கும். ‘சொத்தே வேண்டாம்’ என்று ஒதுங்கிப் போகக்கூடிய நிலை கூட ஒருவருக்கு உண்டாகலாம். ‘ஊசி முனை அளவு இடம் கூடத் தர மாட்டேன்’ என்று சொல்லிப் பாண்டவர்களுக்கு அநீதி இழைத்த துரியோதனாதிகள் அடைந்த துன்பம் கொஞ்சம் அல்லவே. இத்தகைய பிரச்னைகள் தீர எளிய சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள். அவற்றை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedies-for-property-disputes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக