Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

டெல்லி: `ஆக்ஸிஜன் பற்றாக்குறை... 20 பேர் பலி; ஆபத்தில் 200 உயிர்கள்!’ - பரிதவிக்கும் தலைநகர்

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை மிக அதிகமாக இருக்கும் சூழலில், அங்கு கடும் கட்டுப்பாடு நிலவுகிறது. யாசகம் பெற்றோ, திருடியோ மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குங்கள்’ என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து, தலைநகர் டெல்லியின் நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

சிலிண்டர்

இந்தநிலையில் டெல்லி, ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் நேற்று இரவு மட்டும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 20 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் அரை மணி நேரத்துக்கு மட்டும்தான் ஆக்ஸிஜன் இருக்கிறது. இதனால் 200 -க்கும் மேற்பட்ட உயிர்கள் ஆபத்தில் உள்ளதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏதாவது செய்து உடனடியாக ஆக்ஸிஜனுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

ஆக்ஸிஜன்

மேலும் டெல்லி பத்ரா மருத்துவமனை மருத்துவர் குப்தா கூறுகையில், ``நாங்கள் 12 மணி நேரம் கெஞ்சிய பிறகு 500 லிட்டர் ஆக்ஸிஜனை மட்டுமே பெற்றுள்ளோம். எங்கள் அன்றாட தேவை 8,000 லிட்டர். எங்கள் மருத்துவமனையில் 350 நோயாளிகள் இருக்கிறார்கள். கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் தேவை, ஆனால் அது கிடைக்காதபோது என்ன நடக்கும்?’’ என்றார் கவலையுடன்.

டெல்லி

டெல்லி சரோஜ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான இன்-சார்ஜ், ``நாங்கள் புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு. மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/news/20-patients-died-after-oxygen-shortage-in-delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக