Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

இன்று முதல் மீண்டும் தொடக்கம்....! - மாவட்டங்களுக்கிடையே பேருந்து, ரயில் போக்குவரத்து; சென்னையில் மெட்ரோ #NowAtVikatan

மீண்டும் தொடங்கிய பேருந்து, ரயில் சேவைகள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டது. இந்த பொதுமுடக்கத்தில், கடந்த சில மாதங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பொதுமுடக்கத்தால் மாவட்டங்களுக்கிடையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று மாநிலத்துக்குள் ரயில் சேவையும் நின்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் மாதத்திற்கு பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் உடல் வெப்ப சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/07-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக