Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

திருச்சி: `குறைந்தது 200 தொகுதிகள்; சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி?!’ - அன்பில் மகேஷ்

``வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும். நண்பனாக ஆசைப்படுகிறேன்.தி.மு.க கூட்டணியில் போட்டியிடுபவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்கவைக்கலாம் என்று சொன்னதற்குத் தலைவர் செக் வைத்துவிட்டார்" என்று என்று தி.மு.க எம்.எல்.ஏ-அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் - உதயநிதி

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அன்பில் மகேஷ். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ``வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எங்களைப் போன்றோர்கள் கூறி வருகிறார்கள்.

குறைந்தது 200 தொகுதிகளில் நிற்க வேண்டுமென உதயநிதி கூறியுள்ளார். நாங்களும் அதை விரும்புகிறோம். இறுதி முடிவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சியினரை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அதுபோல, தி.மு.க-விலும் கூட்டணி வேட்பாளர்களையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் எனச் சிலர் கூறினர். ஆனால், அதனை தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்பில் மகேஷ்

இது அவரவர் விருப்பம், அதில் நாம் தலையிடக்கூடாது எனத் தெளிவாகக் கூறிவிட்டார். வரக்கூடிய தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், இதுபற்றிப் பேச வேண்டிய தேவையே எழவில்லை. தேர்தல் கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எனினும் அனைத்துத் தோழமைக் கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அனைவரும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்” என்றார்.

அ.தி.மு.க-வில் நிலவக்கூடிய உட்கட்சி விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, `அதைப்பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை’ என்றார். ``தி.மு.க-வில் நான் இரட்டைப் பதவி வகிக்கவில்லை.

உதயநிதி- அன்பில் மகேஷ்- ஸ்டாலின்

திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடனேயே, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்” என்றார், அதனைத்தொடர்ந்து, ``வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும். நண்பனாக ஆசைப்படுகிறேன். அவர் களத்திற்கு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

அன்பில் மகேஷ்

இதில் எந்த மாற்றமில்லை. கடந்த 5 நாட்களில் ஆன்லைன் மூலமாக 1.16 லட்சம் பேர் தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர். இன்னும் லட்சக்கணக்கானோர் இணைந்து கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் தி.மு.க-வின் மீது மக்கள் மனதில் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையான இடத்தில் பிடிப்போம்” என்றார் அன்பில் மகேஷ்.



source https://www.vikatan.com/news/politics/anbil-magesh-talks-about-udhaynithi-and-dmk-in-upcoming-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக