Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இ.எம்.ஐ அவகாசம் நீட்டிக்கப்படுகிறதா? - உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு #NowAtVikatan

இ.எம்.ஐ அவகாசம் நீட்டிக்கப்படுகிறதா?

உச்ச நீதிமன்றம்

வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் த்திய அரசு, ரிசர்வ் வங்கி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடன் தொகையைச்செலுத்த 2 ஆண்டுகள் கூட அவகாசம் தர முடியும் என்று தெரிவிக்கப்படிருந்தது.

Also Read: இ.எம்.ஐ செலுத்துவதில் சிக்கலா? - இதோ சில யோசனைகள்!

கிசான் திட்ட முறைகேடு - உளுந்தூர்பேட்டையில் 4 பேர் கைது!

உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கான கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தில் மோசடி செய்ததாக ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் நலனுக்காக பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் இரண்டு தவணைகளாக ரூ.6,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் பெயரில் நிதியுதவி பெற்று ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமானது.

விவசாயிகள்

இதையடுத்து தமிழகம் முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 20 வேளாண் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டையில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். வேளான் அலுவலரின் புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர்களான கண்ணப்பன், ஏழுமலை, வீரன், மணிமேகலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Corona

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,69,529-ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில், 78,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,045 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66,333ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து 29.01 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா - உலக நிலவரம்

Corona

உலக அளவில் கொரோனா தொற்றால் 258,89,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 860,270 பேர் இதுவரை கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர். 18,171,342 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல், உலக அளவில் கொரோனா பாதிப்புடன் 6,858,212 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/general-news/02-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக