Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

டெபிட், கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு காப்பீடு வசதி... பலரும் அறியாத தகவல்கள்!

``ஒருவருக்கு தற்செயலான மரணம் அல்லது விபத்தின் மூலம் மரணம் ஏற்படும்போது, அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்” எனச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். இதற்கான வசதிவாய்ப்புகளை வங்கிகள், தங்களின் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. காப்பீட்டு விதிகளின்படி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு ஒவ்வொரு வங்கியும் இந்தக் காப்பீட்டை வழங்குகிறது.

இது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இது சார்ந்த விவரங்களைத் தெரிந்துகொள்ள நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு விளக்கமான பதில்களைத் தந்தார் அவர்.

Card Transaction

வங்கிக்கணக்கு / ஏ.டி.எம் காப்பீட்டுத் திட்டம் பற்றி..!

``2015-ம் ஆண்டு முதல் வங்கியின் வடிக்கையாளங்களுக்கு `பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)' மற்றும் `பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY)' என்ற இரண்டு இன்ஷூரன்ஸ் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்விரு திட்டங்களின் மூலமும் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

`பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசியை 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான பிரீமியம் வருடத்துக்கு 330 ரூபாய். அதேபோல, `பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா' திட்டத்தை 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியம் வருடத்துக்கு 12 ரூபாய் மட்டுமே.

விபத்தால் கண்பார்வை இழப்பது அல்லது இரண்டு கைகளையும் நிரந்தரமாக இழப்பது அல்லது இரண்டு கால்களையும் இழப்பது அல்லது ஒரு கண்ணில் பார்வைத் திறனை நிரந்தரமாக இழப்பது போன்ற இழப்புகளுக்கு, இழப்பீடாக ரூ.2 லட்சம் க்ளெய்ம் பெறலாம். ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் பெற முடியும்.

இந்த பிரீமியம் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து `Auto-Debit' மூலம் எடுக்கப்பட்டு, உரிய காப்பீட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும்.”

அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கும் ஒரே மாதிரியான காப்பீட்டுத் தொகைதானா?

``வாடிக்கையாளர்களின் வங்கிச் சேமிப்புத் தொகை, பணப்பரிமாற்றம் ஆகியவற்றைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும். உதாரணத்துக்கு, ரூபே கார்டு உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு வசதி உள்ளது. அதேபோல விசா, மாஸ்டர் கார்டு என வெவ்வேறு கார்டு கொண்டவர்களுக்கு அதற்குத் தகுந்தாற்போல காப்பீட்டுத் தொகையின் அளவு மாறுபடும். ஒரு நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட டெபிட் கார்டு இருந்தால், அட்டை வைத்திருப்பவர் ஒவ்வோர் அட்டையிலும் காப்பீட்டுத் தொகையை உரிமை கோர முடியாது. காப்பீட்டுத் தொகையை ஒரே ஒரு டெபிட் கார்டில் மட்டுமே உரிமை கோர முடியும்.”

> வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்போது, ஏ.டி.எம் இன்ஷூரன்ஸ் திட்டம் குறித்த விவரங்களை வங்கிகள் தெரியப்படுத்துவதில்லையே ஏன்?

> இயற்கை மரணம், விபத்தால் மரணம், தற்கொலை ஆகிய மூன்றுக்குமே இந்தக் காப்பீடு பொருந்துமா?

> காப்பீட்டு பலனைப் பெறுவதற்காக, ஒருவரின் மரணத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதுபோல, வங்கிக்கு எவ்வளவு நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்?

> க்ளெய்ம் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?

> விமான விபத்தால் இறப்பவர்களுக்கும் இந்தக் காப்பீட்டு முறை பொருந்துமா?

- இந்த சந்தேகங்களுக்கான தெளிவான பதில்களுடன் கூடிய முழுமையான தகவல்களை நாணயம் விகடன் இதழில் அறிய க்ளிக் செய்க - https://bit.ly/2RLCHLS

> ரூ.10 லட்சம் வரை ஏ.டி.எம் கார்டு இன்ஷூரன்ஸ்..! - கட்டாயம் அறிய வேண்டிய 7 விஷயங்கள்! https://bit.ly/2RLCHLS

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/business/banking/banks-offering-insurance-cover-on-debit-card-and-credit-cards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக