Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

ஆன்லைன் சூதாட்ட `அல்காரிதம்'... முன்பே தீர்மானிக்கப்படும் வெற்றி, தோல்விகள்!

கொரோனா எல்லோரையும் பொருளாதார ரீதியாக முடக்கியிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசையைத் தூண்டி ஆளைக் கொன்றுகொண்டிருக்கின்றன ஆன்லைன் சூதாட்டங்கள். ரம்மி, கேஸ்டோ கிளப் என்பதில் ஆரம்பித்து, கார் விளையாட்டுகள்கூட இப்போது பணம் கட்டிவிளையாடும் விளையாட்டுகளாக உருவெடுத்துவிட்டன.

இதுகுறித்து சைபர் க்ரைம் வழக்கறிஞரான கார்த்திகேயனிடம் பேசினோம். ``முன்பு சூதாட்டங்கள் நிஜ உலகில் நடந்தன. அப்போது ஒரு மனிதரை எதிர்த்து இன்னொரு மனிதர்தான் விளையாடுவார். ஆனால், இப்போது அப்படியல்ல, விர்ச்சுவல் உலகத்தில் உங்களை எதிர்த்து விளையாடுவதெல்லாம் எல்லாமே ரோபோட்ஸ்தான்.

ரம்மியில் ஆரம்பித்து ஆன்லைனில் உள்ள பெரும்பாலான விளையாட்டுகளில் இப்படித்தான். எதிர்த்து விளையாடுவது மனிதர்கள்தான் என உங்களை நம்ப வைப்பார்கள். நீங்கள் எவ்வளவுதான் திறமையாக விளையாடினாலும் உங்களால் வெற்றி பெறவே முடியாது. ஆன்லைன் கேம்களின் அடிப்படையே அதுதான். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள். உங்களை எப்போது வெற்றிபெற வைக்க வேண்டும். எப்போது தோற்கடிக்க வேண்டும் என்பதை அவர்களின் அல்காரிதம் பார்த்துக் கொள்ளும்.

ஆன்லைன்

இதுமட்டுமல்ல, பெரிய தொகையைக் கட்டி விளையாடும்போது திடீரென இன்டர்நெட் கனெக்‌ஷன் வீக் ஆகிவிட்டாலோ, போன் ஹேங் ஆகிவிட்டாலோ, கட்டிய தொகையை மறந்துவிட வேண்டியதுதான். அதனால்தான் பசங்க ரொம்ப கவனமாக விளையாடுவார்கள். எவ்வளவுதான் ஹை ஸ்பீடு இன்டர்நெட் வைத்திருந்தாலும் திடீரென உங்கள் நெட் கனெக்‌ஷன் கட் ஆகும் அல்லது உங்கள் போன் ஹேங் ஆகும். அதுவும் அவர்களுடைய அல்காரிதத்தின் வேலைதான். ஆனால், இது எதுவும் விளையாடுகிறவர்களுக்குத் தெரியாது. சொன்னாலும் புரியாது. அவர்கள் தங்கள் நெட்வொர்க் மீதோ, போன் மீதோதான் கோபப்படுவார்கள்.

பல ஆன்லைன் விளையாட்டுகளில் அந்த ஆப்பை டவுன்லோடு செய்ததுமே 1,000 ரூபாய் போனஸ் கொடுப்பார்கள். அந்த ஆயிரம் ரூபாயை வைத்து ஆடினால் 2,000 ரூபாய் ஜெயிப்பீர்கள். அது அப்படியே ஐந்தாயிரம், பத்தாயிரம் வரைகூட போகும். ஆனால், அந்தப் பணத்தை உங்களால் வித்ட்ராவல் செய்து எடுக்க முடியாது. குறிப்பிட்ட தொகை வந்தபிறகுதான் வித்ட்ராவல் செய்து எடுக்க முடியும் என விதி வைத்திருப்பார்கள். ஆனால், உங்களால் ஓரளவுக்கு மேல் வெற்றி பெற முடியாது. நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். `எந்த முதலீடும் இல்லாமல் இவ்வளவு ஜெயித்தோமே… விடக் கூடாது' என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவர்களுடைய தூண்டிலில் சிக்கியிருப்பீர்கள். உங்கள் மனம் அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது.

online gambling games

கையில் இருக்கும் பணத்தை வைத்து விளையாடுவீர்கள். அதுவும் போனதும், கடன் வாங்கி விளையாடுவீர்கள். அதுவும் பறிபோகும். இந்த நிலையில் வெளியேறுபவர்கள் தப்பிக்கிறார்கள். இன்னும் சிலர், கம்பெனி பணத்தை, பெற்றோரின் பணத்தை எடுத்து விளையாடத் தொடங்குகிறார்கள். ஜெயித்து திரும்பத் தந்துவிடலாம் என்பது அவர்கள் திட்டம். ஆனால், இந்தப் பணமும் போய்விடும்போது அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்..." என்கிறார்.

> ஆன்லைன் விளையாட்டுகளை இரண்டு வகைகள் என்னென்ன?

> சட்டப்படி தடை செய்ய முடியாதா?

> மாநில அரசுதான் பொறுப்பு... எப்படி?

> விளையாடுபவர்களைக் கைது செய்ய முடியும்!

> ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்காமல் தப்பிப்பது எப்படி..?

- இந்த அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களுடன் முழுமையான கவர் ஸ்டோரியை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/33Lfsa9

> காசு... பணம்... துட்டு... மணி... மணி... ஆளைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டங்கள்! - தப்பிக்கும் வழிகள்! https://bit.ly/33Lfsa9

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/business/money/how-online-fantasy-games-algorithms-will-trap-you

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக