Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

`ஆயுத எழுத்து' சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது... ஹீரோயின் சரண்யா என்ன சொல்கிறார்?!

''விஜய் டிவி ஸ்கூல்லயே படிச்சு அதே விஜய் டிவியில கலெக்டராகவும் ஆகிட்டாங்கப்பா...’' என கடந்தாண்டு இதே நேரம் இப்படி நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணனை மீம் போட்டுக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள் சீரியல் ரசிகர்கள்.

ஸ்ரீத்து தமிழ்தொலைக்காட்சிக்கு அறிமுகமானது விஜய் டிவியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ’7சி’ சீரியல் மூலம்தான். இந்த சீரியலில் பள்ளிக்கூட மாணவியாக நடித்திருந்தார். அன்று பள்ளி மாணவியாக இருந்தவரை கடந்தாண்டு ‘ஆயுத எழுத்து’ சீரியலில் ஹீரோயினாக இறக்கினார்கள். இந்தத் தொடரில் ஸ்ரீத்துவுக்கு கலெக்டர் வேடம்.

ஸ்ரீத்து

ஆனால், ஸ்ரீத்துவுக்கு அந்த மகிழ்ச்சி நான்கு மாதங்கள் கூட நிலைக்கவில்லை. திடீரென ஒருநாள் சிரியலில் இருந்து ஸ்ரீத்து மட்டுமல்ல அவருடன் ஹீரோவாக நடித்த அம்ஜத்தையும் சேர்த்தே மாற்றி விட்டார்கள். ஸ்ரீத்துவுக்குப் பதில் கலெக்டராக கமிட் ஆனவர் ’நெஞ்சம் மறப்பதில்லை’ சரண்யா.

அப்போது நாம் ஸ்ரீத்துவிடம் பேசிய போது, "எல்லாம் நன்மைக்கேங்கிற ஒரு வார்த்தையைத்தான் உங்க கேள்விக்கான பதிலா என்னால சொல்ல முடியும். மத்தபடி என்ன நடந்ததுங்கிற எல்லா விபரமும் போகப்போகத் தானாகவே தெரியவரும். அதேநேரம் சீரியல்கள்ல ஆர்ட்டிஸ்டுகள் மாறுவது வழக்கமா நடக்குறதுதான். ஆனா ஒரு ஆர்ட்டிஸ்ட் வெளியேறி இன்னொருத்தர் வர்றப்ப தர்ற பில்டப் ஒருத்தரை காயப்படுத்தாத அளவுக்கு இருந்தா நல்லா இருக்கும். ‘முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்கியே’னெல்லாம் டயலாக் வெச்சு வெளியே போன நடிகையை கஷ்டப்படுத்தாம இருக்கலாம்" எனச் சொல்லியிருந்தார்.

ஸ்ரீத்து வெளியேறி ஒராண்டு கூட முடியாத நிலையில், இப்போது ‘ஆயுத எழுத்து’ தொடரையே முடிப்பதாக சொல்லி விட்டார்கள்.

ஆயுத எழுத்து சீரியல் பற்றிய மீம்

Also Read: `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா vs போட்டோஷூட் ஷிவானி... எல்லை மீறும் வார்த்தைகள், பிரச்னை என்ன?!

இப்போது மலையாள சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீத்துவிடம் பேசினால், "நல்லா போயிட்டிருந்த சீரியல்ல நாயகியை மாத்தினா இதுதாங்க நடக்கும். ’பிக்பாஸ்’ தொடங்கப்போறதால முடிச்சுட்டாங்கனு சொல்றதுலெல்லாம் உண்மையில்லை..." எனப் படபடவெனப் பேசியவர், சுதாரித்து, "அதுசரி, இந்த விவகாரத்துல நான் எதுக்குக் கருத்துச் சொல்லணும். எது நடக்கணுமோ அது நல்லபடியாகவே நடந்திருக்கு" எனப் பேச்சை முடித்துக்கொண்டார்.

சரி, இப்போது ஏன் ‘ஆயுத எழுத்’தை முடித்தார்கள்?

சீரியல் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள இந்தக் கேள்விக்கான சரியான விடை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேநேரம் ஸ்ரீத்து வெளியேறியபோது பட்ட அதே கஷ்டத்தை சரண்யாவும் பட்டிருக்கிறார் என்பதை அவரது வீடியோ பேச்சு காட்டிவிட்டது.

சரண்யா

'' 'ஆயுத எழுத்து' சீரியலை ஏன் முடிச்சுட்டாங்கனு எல்லாரும் எங்கிட்டக் கேட்டுட்டிருக்கீங்க. சத்தியமா எனக்கும் காரணம் தெரியலை. தெரியாம நான் என்னத்த சொல்றது? என்ன காரணத்தால முடிக்கப்பட்டுச்சுன்னு எனக்கு சம்பந்தப்பட்டவங்ககிட்ட இருந்து சொல்லப்பட்டா, உடனே நானும் அந்தக் காரணத்தை உங்களுக்குச் சொல்லிடுறேனே" எனப் பேசியிருக்கிறார் சரண்யா.

சின்னத்திரை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, திடீர்னு சீரியல்கள் நிறுத்தப்பட்டா, பின்னனியில இருக்கிற பொதுவான காரணம் டி.ஆர்.பி.தான். ஆனா ஒரு சீரியல்ல ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல மாத்துறதுங்கிறது அரிதா நடக்கிற விஷயம். அந்த விஷயம் ‘ஆயுத எழுத்து’ தொடர்ல நடந்துச்சு. ஆனா அப்படி மாத்தின பிறகும் சீரியல் நிறுத்தப்படுதுன்னா அது பெரிய சோகம்தான்" என்கிறார்கள்.

இதுக்கு என்ன மீம்ஸ் வருமோ தெரியவில்லை!



source https://cinema.vikatan.com/television/the-reason-behind-discontinuing-ayudha-ezhuthu-serial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக