Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திருச்சி: `மத்திய அரசை விமர்சித்தால் வருமானவரித்துறை ரெய்டு வரும்!' - கே.என்.நேரு

`மத்திய அரசு வருமான வரித்துறையைக் கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள். இதனால் பலர் மத்திய அரசைப்பற்றிப் பேசவே அஞ்சுகிறார்கள்' என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

கே.என். நேரு

தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ``தந்தை பெரியாரைத் தமிழக மக்கள் மனதில் ஏந்த வேண்டும். பட்டியலின மக்கள் இன்று வளமுடன் இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பெரியார் தான் காரணம். எனவே அவரை நினைவில் கொள்ள வேண்டும்.

சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதை மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்கு தி.மு.க-வினர் கவுன்டர் கொடுத்தைப்பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு முடக்க நினைக்கிறார்கள். ஜல்லிக்கட்டுத் தடை நீக்கம் போல நீட்தேர்வுக்கு தடை கேட்டுப் பெறுவோம். நீட் தேர்வுக்கு தி.மு.க ஆட்சியில் அனுமதி அளித்ததாகக் கூறுவது தவறு. நீட் தேர்வு குறித்து ஆய்வு நடத்த மட்டுமே தி.மு.க ஆட்சிக் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய கே.என் நேரு

இது குறித்துப் பேசுபவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அனுமதியை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்டது குறித்துப் பேச மறுப்பது ஏன் என்று தெரியவில்லை” என்றார்.

அதனைத்தொடர்ந்து ‘நடிகர் சூர்யாவிற்கு’ பா.ஜ.க-வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களே கேள்விக்கு. ”மத்தியில் ஆட்சி இருக்கிறார்கள், அவர்கள் வருமான வரித்துறை போன்ற துறைகளைக் கையில்வைத்திருப்பதால், இதுபோன்ற திரைப்பட நடிகர்களை மிரட்டுகின்றார்கள்” என்றார்.

`வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்களே என்ற கேள்விக்கு, ``காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்படி ஏதும் நடைபெறவில்லை அது தவறான தகவல்” எனாறார்.

கே.என். நேரு

கிசான் விவகாரம் முறைகேடுகள் குறித்துக் கேட்டதற்கு, ``விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்துக் கண்டுபிடித்து விட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் கூறுகிறார். 150 கோடி ரூபாய் அளவில் நடைபெற்ற ஊழலில் 70 பேரை மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தவரை உண்மையான அளவு பணத்தைத் திரும்பப் பெற்று உண்மையான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” என்றுக் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kn-nehru-criticize-central-and-state-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக